Showing posts with label சுட்டிகள். Show all posts
Showing posts with label சுட்டிகள். Show all posts

Tuesday, June 2, 2009

அசைபட GIF கோப்புகளை உருவாக்க - ஆன்லைன் தளம்

இணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு அனிமேட்டட் பேனர்ஸ் (Animated Banners) கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம்.



GIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள ஆன்லைன் இணையதளம் : http://www.gickr.com/ அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.

Flickr தளத்தில் ஏற்கனவே இருக்கும் படங்களையும் http://www.gickr.com/ மூலம் GIF ஆக மாற்றிடலாம். அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize).



சுட்டி:- http://www.tamilnenjam.org/2009/05/gif.html

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க

வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.

உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.



இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது.
Firewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும். 

https://secure.logmein.com/products/hamachi/vpn.asp?lang=en





சுட்டி
http://www.tamilnenjam.org/2009/05/blog-post_5987.html

Saturday, May 16, 2009

விரும்பிய மென்பொருட்களின் Serial No பெறுவது எவ்வாறு?


ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள்.
இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்துdownload செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.


உரிமை TamilhackX

காசு மிச்சம் செய்ய கூகிளின் புதிய சேவை - Tip Jar !!


பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் ”வரவு எட்டணா,செலவு பத்தணா” பாட்டில்குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்று பாட்டோடு பாட்டாக சொல்லி இருப்பார்கள்.
உதாரணமாக, “வாடகை சோபா இருபது ரூபாவிலைக்கு வாங்கினா முப்பதே ரூபா.
இப்போது recession என்று பூச்சாண்டி காட்டிஆட்குறைப்பு,சலுகைக்குறைப்பு என நம் கையில் புரளும் பணத்தை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
இந்த சமயத்தில்கையில் இருக்கும் பணத்தை மாசக் கடைசி வரை ஜவ்வு மாதிரி நீட்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.
அடுத்த மாசம் சம்பளம் வர வரைக்கும்தானேன்னு நீங்க கேட்கறத்துக்கு முன்னாடிஅடுத்த மாசம் வேலையிலே இருப்போமான்னு முதல்ல கேட்டுக்குங்க.
ஏன் இவ்வளவு பில்ட்-அப்?
நம்ம கூகிள் Tip Jar -ன்னு ( http://www.google.com/tipjar) ஒரு புதிய சேவையை ஆரம்பித்து இருக்கிறது.

வீட்டில்அலுவலகத்தில்ஷாப்பிங்கில் என்று எங்கே,எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்ற மற்றவர்களின் ஐடியாக்களை தெரிந்து கொள்ளவும், உங்களுடைய ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளவும்ஒரு பயனுள்ள தளமாக விளங்க முயற்சிக்கிறது.

உங்களுக்கு உபயோகமான சேமிப்பு ஐடியாக்களுக்கு ஓட்டு போட்டு அதன் popularity-ஐ ஏற்றலாம்அல்லது பிடிக்காதவற்றுக்கு Negative ஓட்டு போட்டு குறைக்கலாம்.
பார்த்ததில் என் ஃபேவரிட் “சுதந்திர மென்பொருளை பயன்படுத்துங்கள்காசு மிச்சம்!!
இப்ப இருக்கிற பொருளாதார மந்த நிலைக்கு இந்த சேவை தேவைதான்.
அலர்ட்!!
நீங்க கொடுக்கிற ஐடியாக்களைஒரு பைசா கொடுக்காமல் கூகிள் பயன்படுத்திக் கொள்ள அதற்க்கு உரிமை இருக்கிறதாம்.
தேடித் தேடிப் பார்த்தேன். BETA வார்த்தையே காணோம்.
சந்தேகமாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்க.
BETA -ன்னு ஒரு வார்த்தை இல்லேன்னா, அது உண்மையாலுமே கூகிள் சேவைதானா?



http://suthanthira-ilavasa-menporul.blogspot.com

Thursday, April 16, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு


நாம் தினமும் பல்வேறு கோப்புகளை Rapidshare தளத்தில் இருந்து இறக்கிப் பயன்பெற்றுள்ளோம்.

அங்கே யாரோ ஒரு நண்பர் இந்தக் கோப்புகளை ஏற்கனவே ஏற்றி வைத்துள்ளதால் நம்மால் அதைப் பயன்படுத்த முடிகிறது.

நாமும் நமது கோப்புகளை Rapidshare போன்ற கோப்புப்பகிர்வான் தளங்களில் (File Hosting Sites) ஏற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரு எளிய விடை : http://www.uploadmirrors.com/ தளத்தை நாடுவதே.

இந்தத் தளத்தின் வீட்டுப்பக்கத்தைத் (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும்.

ஒரே சொடுக்கில் 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தள முகவரி : http://www.uploadmirrors.com/



தமிழ்நெஞ்சம் 

Tuesday, March 10, 2009

MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் பார்ப்பது எப்படி?


நேற்று ஒருவர் வீட்டிற்குக் கணினி பழுது நீக்க(hardware service) சென்றிருந்தேன். அப்போது அவர் அவருடைய கணினி மிகவும் மெதுவாக இயங்குகிறது எனக் குறை கூறினார்.  அவர் கணினி "Add/Remove Program"-ஐ பார்க்கும் போது தான் தெரிந்தது, ஒரே வேலையை செய்யும் பல்வேறு மென்பொருட்களை நிறுவி இருந்தார்.  முக்கியமாக, DVD player, AVI Player, DIVX player, MP4 player, MKV player என வரிசையாக 15 மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து நிறுவியிருந்தார்.
மென்பொருட்களை நிறுவாமலேயே, எல்லா வகைக் கோப்புகளையும் பார்ப்பது எப்படி என்று அவருக்கு விளக்கமாக கூறினேன்.  அந்த விளக்கம் உங்களுக்காக........
ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம்.  ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும்.  அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும் .


Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும்  மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். 
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.



பாபு 

கோப்புகளை விரிக்க ஒரு நேரடி வசதி


சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம். அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.

ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.

நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/

இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச் செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.
விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத் தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும். உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.

குறிப்பு :
1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.
2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமே


தளமுகவரி : http://www.wobzip.org/





தமிழ்நெஞ்சம் 

Friday, December 26, 2008

twiiter ஐ இப்போது gmail லிருந்த படியே ட்விட்டலாம்





நீங்கள் ஜீமெயில் பாவிப்பவரா?? அடிக்கடி நண்பர்களுடன் ட்விட்டரில் அரட்டுபவரா?? அப்படியாயின் நீங்கள் கட்டாயம் இதை தொடர்ந்து வாசிக்க வேணும்...

தற்போது twitter ஐ உங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஆக பொதிந்து கொள்ள முடியும்.

http://www.twittergadget.com/gadget_gmail.xml

என்பதை


setting ---> gadget---->பின் வரும் பெட்டிக்குள் URL ஐ பொதிந்து விட்டு add செய்து விடுங்கள் பின் ஒரு தடவை refresh செய்தால் ஜிமெயில் அரட்டை பெட்டிக்கு கீழே உங்கள் twiiter பெட்டியை காணலாம். பிறகென்ன! கணக்கை உள்நுழைந்து அடித்து நொருக்க வேண்டியதுதானே!


அப்படி இன்னமும் தங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஐ Enable செய்யாதவர்கள்.

setting--> Lab--> Add any gadget by URL ---> select enable


என்னது இவ்வளவு சொல்லியும் புரியலயா???
புறப்படுங்க இங்க



Friday, December 12, 2008

நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது எப்படி?



"ஆல் இந்தியா ரேடியோ. செய்திகள் வாசிப்பவர் : சரோஜ் நாராயண் சாமி", இந்தக்குரலைக் கேட்காத வானொலி ரசிகர்கள் இருக்க முடியாது. அவர் குரலின் கம்பீரம் எல்லோருக்கும் பிரசித்தமான ஒன்று.

அவர் செய்திகளை வாசிக்கும்போது வேற்று நாட்டினரின் பெயர்களை உச்சரிப்பதில் மகா சிரத்தையுடன் இருப்பார்.

"வாழப்பாடி ராமமூர்த்தி" என்கிறவரின் பெயரை "வாழப்பாடி ரமாமூர்த்தி" என்று கூறிவிடக் கூடாது.

நான் பார்த்த ஆங்கிலச் சேனலில், "குமரி அனந்தன்" என்கிறவரது பெயரைக் "குமாரி ஆனந்தன்" எனத் தவறாக உச்சரித்தனர்.

இது நாள்தோரும் நடக்கின்ற ஒன்று. இந்திய "கால் செண்டர்"களில் பணிபுரிபவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுக்கிறார்கள் - எவ்வாறு அடுத்த நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது என்பது பற்றி.

நான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :

http://www.howtosaythatname.com/

இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின் ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.

பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.

சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.


http://www.howtosaythatname.com/

Monday, November 10, 2008

யூடியூப் வீடியோவின் குறிப்பிட்ட பாகத்தை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பது எப்படி?


ஒரு முழு யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் ஒரு சுட்டியாகப் பெற்று நண்பர்களிடம் அந்தச் சுட்டியைத் தந்தால் அவர்கள் முழுப் படத்தையும் காணவேண்டிய அவசியமின்றி, விருப்பப்பகுதியை மட்டும் காணச் செய்யலாம்.

அதற்காக http://www.splicd.com/ உதவுகிறது.

உதாரணமாக கத்தாழக் கண்ணாலே பாடலின் 2:00 நிமிடத்தில் இருந்து 2:30 நிமிடம் வரையுள்ள பகுதியை மட்டும் விருப்பப்பகுதியாகத் தேர்வுசெய்து அதை மட்டும் காணலாம்.

கத்தாழக் கண்ணாலே : முழு யு.ஆர்.எல் : http://in.youtube.com/watch?v=RhXb-GN8MXM

From : 2:00 To : 2:30 கொடுத்தபிறகு Continue க்ளிக் செய்யவும்.

share: http://splicd.com/RhXb-GN8MXM/120/150

Share · View Original · Play All · Play Splice

share: http://splicd.com/RhXb-GN8MXM/120/150 யு.ஆர்.எல்லை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தால் அவர்கள் அந்த 2:00 நிமிடத்தில் இருந்து 2:30 நிமிடம் வரை உள்ள 30 வினாடிகளுக்கான படத்தை நேரடியாகக் காணலாம்.



ஒரு இணையப்பக்கத்தில் உள்ள எழுத்துப்பிழைகளைக் கண்டறிவது எப்படி?



இந்தச் சேவையை அளிக்கிறது http://spellist.com/ பயன்பாட்டுத்தளம்.http://spellist.com/ ல் உள்ள TextBox ல் இணையப்பக்கத்தின் முகவரி (URL) யை இட்டு Spell Check Page என்பதை அழுத்தினால் போதும்.



அந்தப் பக்கத்தில் எத்தனை வார்த்தைகள் சோதிக்கப்பட்டன, எத்தனை எழுத்துப்பிழைகள் கண்டறியப்பட்டன, அடையாளம் காணமுடியாத வார்த்தைகள் எத்தனை, அவைகள் என்ன என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகள் உடனே தெரிந்துவிடும்.

இந்தத்தளமானது ஆங்கில மொழிக்கு மட்டுமே ஏற்புடையதாக உள்ளது.



Sunday, October 26, 2008

Quarkbase இணையத்தளம்


உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.
இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.
இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.
உடன போய் தேடி பாருங்க..
ஊரோடி 

Saturday, October 18, 2008

இணையப்பக்கங்களை அச்செடுக்க உதவும் தளம்

எப்பொழுதாவது ஏதாவது ஒரு இணையப் பக்கத்தை அச்செடுக்க முயன்றிருப்பீர்கள். ஆனால் அதில் அச்சுக்குத் தேவையில்லாத வெறும் வெற்று இடைவெளிகளும், விளம்பரங்களும், கட்டம் கட்டமாகக் காரணமே இல்லாத தகவல்களும் சேர்ந்தே அச்சாகி வெளியே வரும். இதனால் அச்சு மை, தாள், நேரம், பணம் என நிறையக் காரணிகள் செலவாகும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது.

தளத்தின் யு.ஆர்.எல் பெட்டியில் எந்த இணையத்தளம் என்பதன் முகவரியை உள்ளிட வேண்டும்.
பிறகு எந்த எந்தப் பகுதிகள் மாத்திரம் உங்களுக்குத் தேவை என்பதை கட்டம் கட்டிக் காண்பிக்க வேண்டும்.


பிரிண்ட் - எனக் கொடுத்தால் நமக்குத் தேவையான பகுதிகள் மாத்திரம் அச்சாகி வெளிவரும்.

சிறப்பம்சங்கள் : 
எந்தவிதமான மென்பொருள் தரவிறக்கம், நிறுவுதல் எதுவும் தேவையில்லை.
பின்னால் உள்ள படங்களை அகற்றிவிட்டு அச்செடுக்கலாம்.
எழுத்துருக்களைப் பெரிதாக / சிறிதாக மாற்ற முடிகிறது.

இணையப்பக்கத்தில் எந்த குறிப்பிட்ட அம்சங்கள் மாத்திரம் உங்களுக்குத் தேவையோ அவைகளை மாத்திரம் அச்செடுக்கலாம் என்பதே இந்தத்தளத்தின் தாரகமந்திரம்.



Wednesday, October 8, 2008

பத்து இலவச மென்பொருள்கள்













படத்தின் மேல் சொடுக்கினால் சம்பந்தப்பட்ட தளத்துக்குச் சென்று மேலதிக விபரங்களைப் பெறலாம்.