Friday, June 27, 2008

online ஓடியோ எடிற்றர்

adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது

http://www.splicemusic.com/

1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்

2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்

3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்

4)ஒலித்தொகுப்புகளை

பகிரலாம்இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை

Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது



உரிமை தமிழ்பித்தன்

Monday, June 2, 2008

இலவச audio editing software



நீங்கள் ஒலிப்பதிவு போடுவதற்க்கு தடையாக audio editing மென்பொருள்தான் என்றால் இனி கவலையை விடுங்கள் இதே ஒரு இலவச ஒடியோ எடிற்றிங் மென்பொருள் http://audacity.sourceforge.net/என்ற முகவரியில் சென்று தரவிறக்கி ஒலிப்பதிவை தொடருங்கள்


இதில் கையாளக்கூடிய பைல் வகைகள் mov, aac, m4a and ம்ப௩


பிற்குறிப்பு;-அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒத்திச்சைக்கும்

உரிமை : தமிழ்பித்தன்

புதிய வரவு மின்னஞ்சல்கள்

பல மின்னஞ்சல் சேவைகள் பாவனையில் உள்ளன. ஆனாலும் பலரால் yahoo gmail hotmail(livemail) போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன பல வேறு துறைகளில் சக்கை போடுவனவும் தற்போது களத்தில் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன அப்படி புதிதாக அறிமுகமாகிய சில மின்னஞ்சல்கள்.

http://www.azoocamail.com/
இத்தளமானது வீடியோ ஈமெயில் ஆனுப்புவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றபடி வழமையான அனைத்து வசதிகளும் இதில் உண்டு நேரடியாக நீங்கள் வெப் கமரா கொண்டு வீடியோ மின்னஞ்சலை தயாரித்து அனுப்பலாம். எந்த மென்பொருளும் உங்களுக்கு தேவையில்லை ஓடீயோவும் அதுபோலவே, 250 mb வரையான வீடியோவை ஒரே தடவையில் அனுப்பலாம்.

http://www.twittermail.com/
hi5 போல நண்பர்களை இணைக்க உதவிய twitter தற்போது தனது மின்னஞ்சலைப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு கணக்கு வைத்திருப்போரே உள்நுழையலாம் மற்றவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதுதான் அதில் உள் நுழைந்தவர்கள் அனுப்ப வேண்டும். நான் கோரிக்கை விடுத்திருக்கிறேன், கிடைத்தால் உங்களுடன் பகிர்கிறேன்.

உரிமை : தமிழ்பித்தன்

Sunday, August 27, 2006

கணனி wallpapers

நான் மாதம் இருதடவை என் கணனியின் முகப்பில் உள்ள wallpaperஜ மாற்றுவேன். அதற்காக இணையம் உலாவும் போது அழகான படங்களை சுடுவது வழக்கம். ஆனால் என்ன அவை அனைத்திலுமே அந்த இணையப்பக்கத்தின் இணைய முகவரி எழுதப்பட்டிருக்கும். :-( ஆனால் அண்மையில் இத்தளத்திற்கு சென்றபோது கண்கவர் பல wallpapers என் கண்ணில் பட்டன. அவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பயன்படட்டும் என நினைத்தே இங்கே பதிகிறேன்.


{அதுசரி wallpaper கு தமிழ் என்னங்கோ? யாராவது சொல்லுங்கப்பா? }

Monday, May 29, 2006

இணைய வடிவடைப்பு

இணையத்தின் மூலம் எத்தனையோ கல்விகளை இன்று கற்க முடியும். அண்மையில் நான் தமிழ்கவிதை பொழுதுபோக்குத்தளத்தை  உருவாக்க முயற்சி செய்தபோது HTML , JAVASCRIPT , CSS , XHTML போன்றவற்றறில் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கு மிகவும் உதவியது இந்ததளம்தான். இங்கே இணையபக்கவடிவமைப்புக்கு வேண்டிய பெரும்பாலான பாடங்கள் தெளிவான விளக்கங்களுடனும் சுலபமான ஆங்கில மொழியோடும் அடுக்கப்பட்டிருக்கின்றன. விளங்க முடியாத ஆங்கில வார்த்தைகளை விளங்கிகொள்ளத்தான் நம்மட கூகிள்மொழிமாற்றி இருக்கிறாரே.