Saturday, September 6, 2008

ரியல் மீடியாவை எம்பி3 ஆக மாற்ற இலவச மென்பொருள்

ரியல் மீடியாவகையறாக்களை எம்பி3 வகைக் கோப்புக்களாக மாற்றி ஐ-பாடு இன்னபிற கருவிகளில் கேட்பதற்கு உதவும் எளிய முகப்பு கொண்ட இனிய மென்பொருள் உங்கள் அறிமுகத்திற்காக.

http://www.rm-mp3.org/free-rm-mp3-converter.exe
http://www.rm-mp3.org/


உரிமை தமிழ்நெஞ்சம்


Thursday, September 4, 2008

கூகிள் எல்லோருக்கும் தெரியும். டூகிள் தெரியுமா?



டூகிள் தேடுபொறியில் ஆங்கிலத்தில் - Rajinikanth - என்று தட்டெழுதி என்டரியவுடன் Rajinikanth ன் படம் - Rajinikanth - என்னும் வார்த்தைகளாலே வருகிறது.

உரிமை தமிழ்நெஞ்சம்

கேஜிபி சுருக்கி-விரிப்போன்

வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம்.

உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான்.

இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம்
http://kgbarchiver.net/?page=download

உரிமை தமிழ்நெஞ்சம்

மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்


மைக்ரோசாப்ட் வழங்குகிறது 5 ஜிபி அளவுக்கு இலவச கோப்புப்பகிர்வான் சேவை.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா முதலிய குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவை பீட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால் 1 ஜிபி அளவே வழங்கப்பட்டு வந்தது.

இப்போது ஆஸ்திரேலியா, பிரான்சு, ஸ்விஸ்ஸ்ர்லாந்து, கனடா மற்றும் இன்னபிற நாடுகளிலிருந்து இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆரெஸ்ஸெஸ் பயன்பாடும் உள்ளது. இந்தச் சேவைக்கு விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் என்று பெயர்.

கோப்பு - மற்றும் போல்டர்களை - உங்களது இணையத்தளத்திலோ / வலைப்பூவிலோ நேரடியாக பொதிந்து (எம்பெட்) வழங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

உங்கள் வலையைப் படிப்பவர்கள் அதில் இருந்தபடி நேரடியாக கோப்புகளை இறக்கிக்கொள்ளலாம். தனியாக வேறு தளத்துக்குச் செல்லவேண்டிய அவதி இல்லை.

ஏஓஎல் தளமும் இதே போன்று 5 ஜிபி அளவுக்கு இளவச கோப்புப்பகிர்வான் சேவையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://skydrive.live.com/
http://skydriveteam.spaces.live.com/


உரிமை தமிழ்நெஞ்சம்

வைரசு இருக்கா? இல்லையா?

 
உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.

உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.

முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.



கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)
Aladdin (eSafe)
ALWIL (Avast! Antivirus)
Authentium (Command Antivirus)
Avira (AntiVir)
Bit9 (FileAdvisor)
Cat Computer Services (Quick Heal)
ClamAV (ClamAV)
CA Inc. (Vet)
Doctor Web, Ltd. (DrWeb)
Eset Software (ESET NOD32)
ewido networks (ewido anti-malware)
Fortinet (Fortinet)
FRISK Software (F-Prot)
F-Secure (F-Secure)
AVG Technologies (AVG)
Hacksoft (The Hacker)
Ikarus Software (Ikarus)
Kaspersky Lab (AVP)
McAfee (VirusScan)
Microsoft (Malware Protection)
Norman (Norman Antivirus)
Panda Security (Panda Platinum)
Prevx (Prevx1)
Rising Antivirus (Rising)
Secure Computing (Webwasher)
Softwin (BitDefender)
Sophos (SAV)
Sunbelt Software (Antivirus)
Symantec (Norton Antivirus)
VirusBlokAda (VBA32)
VirusBuster (VirusBuster)

முகவரி: http://www.virustotal.com/



  உரிமை தமிழ்நெஞ்சம்