Thursday, April 16, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு


நாம் தினமும் பல்வேறு கோப்புகளை Rapidshare தளத்தில் இருந்து இறக்கிப் பயன்பெற்றுள்ளோம்.

அங்கே யாரோ ஒரு நண்பர் இந்தக் கோப்புகளை ஏற்கனவே ஏற்றி வைத்துள்ளதால் நம்மால் அதைப் பயன்படுத்த முடிகிறது.

நாமும் நமது கோப்புகளை Rapidshare போன்ற கோப்புப்பகிர்வான் தளங்களில் (File Hosting Sites) ஏற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரு எளிய விடை : http://www.uploadmirrors.com/ தளத்தை நாடுவதே.

இந்தத் தளத்தின் வீட்டுப்பக்கத்தைத் (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும்.

ஒரே சொடுக்கில் 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தள முகவரி : http://www.uploadmirrors.com/



தமிழ்நெஞ்சம் 

Saturday, March 28, 2009

இணையத்தில் புதிது - ரியா நுட்பம்


இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.
RIA - Rich Internet Applications
RIA - Rich Internet Applications
இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.
சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.
இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.
இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.
இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.
எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.
கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications

கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்


கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார்.
“வாழ்வது ஒரு முறை - நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.
Free Games
Free Games
பழைய விளையாட்டுகள் போரடித்தால் உடனே புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடுவார். நீரில்லாத மீன் எப்படித் துடிக்குமோ - அதே போல அவரது மனம் படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிடும்.
அவரே எனக்கு இந்த தளங்களை சிபாரிசு செய்தார். இங்கே முற்றிலும் இலவசமான கணினி விளையாட்டுகள் உங்கள் தரவிறக்கத்துக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் பணப்பையில் இருந்து பணம் செலவு செய்யத் தேவையில்லை. கடன் அட்டை மூலம் கணினி விளையாட்டுகள் வாங்கத் தேவையில்லை.
அந்தத் தளங்கள் இதோ:
  1. GameTop.Com
  2. FreeGamePick.Com
  3. FunPcGame.Com
  4. Share-Games.Com
  5. GrandMatrix.Com
கலைச்சொற்கள்:
கணினி விளையாட்டுகள் - Computer Games
தரவிறக்கம் - Download
பணப்பை - Wallet
கடன் அட்டை - Credit Card

Friday, March 27, 2009

தேடுதல் வசதி இல்லாதத் தளங்களில் தேடுவது எப்படி?

தகவல் அதிகமாக இருக்கும் சில தளங்களில் கூட தேடுதல் வசதி இருப்பதில்லை. அப்படிப்பட்ட தளங்களில், கூகிள் உபயோகித்துத் தேடுவது எப்படி என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால்,  எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும்.  குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும்  முடிவு வேண்டும் என்றால்,  கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:  
keyword +site:http://www.sitename.com

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில் தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

(ஜிமெயில் என்று இந்த தளத்தில் தேடிட, இவ்வாறு கொடுக்க வேண்டும்!)

பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி

உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.

1.
ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.


2.I’ll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.


3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா என்று கவனிக்கவும்.


4.அடுத்ததாக உள்ள network.http.pipelining.maxrequest என்பதை Double click செய்து தோன்றும் விண்டோவில் 4 என்பதை 8 ஆக மாறிக்கொள்ளவும்.

5.
கடைசியில் உள்ள network.http.proxy.pipelining என்பதை Double click செய்து False என்பதைTrue ஆக மாற்றிக்கொள்ளவும்.

6.
இனி about:config விண்டோவில் Right click செய்து New என்பதை select செய்யவும் . அதில்Boolean என்பதை கிளிக் செய்யவும்.









7.
புதியதாக தோன்றும் விண்டோவில் content.interrupt.parsing என்று டைப் செய்து Okசெய்யவும் .









8. 
இறுதியாக true என்பதை select செய்து ok செய்யவும் .












கார்த்திக்