Sunday, January 10, 2010

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்


போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

தள்ளாத வயதினுலும் தளாராத தாகம் கொண்டீர்
தானைத் தலவனை வித்திட்டு தமிழெனுங்கும் உறவு கொண்டீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

உலகமெல்லாம் உறவிருக்க உம்முலகம் ஈழம்தானென்றீர்
இறுதிவரை மண்ணின் மைந்தர்களோடும் மக்களோடும் தானிருந்தீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

கொடிய மிருகங்களிடம் உம்முயிர் துறந்து
எம்மிருள் நீங்க அழியாச்சுடரானீர் அருட்தந்தையுமானீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

ஆயிரமாயிரம் மாவீரச் செல்வங்களோடு நீரும் துயிலச்சென்றீர்
மானங் கொண்ட தமிழனிடத்தே மாதந்தை யெனும் பேருங்கொண்டீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

Tuesday, November 17, 2009

Tuesday, June 2, 2009

அசைபட GIF கோப்புகளை உருவாக்க - ஆன்லைன் தளம்

இணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு அனிமேட்டட் பேனர்ஸ் (Animated Banners) கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம்.



GIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக உள்ள ஆன்லைன் இணையதளம் : http://www.gickr.com/ அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.

Flickr தளத்தில் ஏற்கனவே இருக்கும் படங்களையும் http://www.gickr.com/ மூலம் GIF ஆக மாற்றிடலாம். அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize).



சுட்டி:- http://www.tamilnenjam.org/2009/05/gif.html

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க

வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.

உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn.



இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது. நிறைவான பாதுகாப்புடன் இயங்கும் மென்பொருள் இது.
Firewall, router - எதையும் மாற்றியமைக்காமல் இயங்கும். 

https://secure.logmein.com/products/hamachi/vpn.asp?lang=en





சுட்டி
http://www.tamilnenjam.org/2009/05/blog-post_5987.html

Saturday, May 16, 2009

விரும்பிய மென்பொருட்களின் Serial No பெறுவது எவ்வாறு?


ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள்.
இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்துdownload செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.


உரிமை TamilhackX