Friday, November 28, 2008

Parallels released Parallels Desktop 4.0


அப்பிள் கணினிகளில் வின்டோஸ் மென்பொருள்களை இயங்க வைக்க உதவும் மென்பொருள்களில் பிரபலமான மென்பொருள் Parallels நிறுவனத்தின் Parallels Desktop for Mac. இவர்கள் தமது மென்பொருளின் பதிப்பு நான்கினை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.
அப்பிள் கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்தி விரும்பிய வின்டோஸ் மென்பொருள்களை தங்கள் கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
பதிப்பு நான்கில் உள்ள முக்கிய வசதிகளாவன..
64-bit OS support
4-way multiprocessor support
8 GB allocable to the guest OS
DirectX 9 with Pixel Shader 2.0
OpenGL 2.1
256 MB of video RAM allowed (up from 64)
Leopard Server as a guest.

Monday, November 10, 2008

யூடியூப் வீடியோவின் குறிப்பிட்ட பாகத்தை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பது எப்படி?


ஒரு முழு யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் ஒரு சுட்டியாகப் பெற்று நண்பர்களிடம் அந்தச் சுட்டியைத் தந்தால் அவர்கள் முழுப் படத்தையும் காணவேண்டிய அவசியமின்றி, விருப்பப்பகுதியை மட்டும் காணச் செய்யலாம்.

அதற்காக http://www.splicd.com/ உதவுகிறது.

உதாரணமாக கத்தாழக் கண்ணாலே பாடலின் 2:00 நிமிடத்தில் இருந்து 2:30 நிமிடம் வரையுள்ள பகுதியை மட்டும் விருப்பப்பகுதியாகத் தேர்வுசெய்து அதை மட்டும் காணலாம்.

கத்தாழக் கண்ணாலே : முழு யு.ஆர்.எல் : http://in.youtube.com/watch?v=RhXb-GN8MXM

From : 2:00 To : 2:30 கொடுத்தபிறகு Continue க்ளிக் செய்யவும்.

share: http://splicd.com/RhXb-GN8MXM/120/150

Share · View Original · Play All · Play Splice

share: http://splicd.com/RhXb-GN8MXM/120/150 யு.ஆர்.எல்லை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தால் அவர்கள் அந்த 2:00 நிமிடத்தில் இருந்து 2:30 நிமிடம் வரை உள்ள 30 வினாடிகளுக்கான படத்தை நேரடியாகக் காணலாம்.



புதிதாக வாங்கிய கணினியின் தேவையற்ற பயன்பாடுகளை நீக்குவது எப்படி?

நண்பர் ஒருவர் ஒரு புத்தம்புதிய கணினி வாங்கினார். அத்துடன் அவருக்கு இலவச இயங்குதளம் மற்றும் பலவித மென்பொருள் பயன்பாடுகளும் முன்கூட்டியே நிருவப்பட்டுக் கொடுக்கப்பட்டது.

இயங்குதளம் இலவசமாகக் கிடைப்பது நல்லதுதான்.ஆனால் கூடுதலாகக் கிடைக்கும் தேவையில்லாத டிரையல் பயன்பாடுகள் எல்லாமே தேவைப்படப்போகிறதா? - இந்தக் கேள்விக்கு விடை தேடினால் கண்டிப்பாக நிறைய இணைப்புப் பயன்பாடுகள் குப்பையானவையே என அறியலாம்.

இந்த அப்ளிகேசன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடக் கூடிய டிரையல் பயன்பாடுகளாகவே இருக்கும். இவைகள் வைரசு எதிர்ப்பு, பல்லூடகம் (மல்ட்டிமீடியா) தொடர்பானவைகளாக அமைந்திருக்கும்.

இந்தக் குப்பை (ஜன்க்) பயன்பாடுகளை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து, அவற்றை நீக்குவது என்பது ஒரு முறையான அணுகுமுறையாக இருப்பினும் - அதற்கு ஆகக்கூடிய கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டால் காலமும்,நேரமும் வீணாவது தவிர்க்க இயலாது.

இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்ததுதான் PC Decrapifier பயன்பாடு.
இது ஒரு இலவசப் பயன்பாடு. இயக்குவதற்கு எளிமையானது. புதிதாக வாங்கிய கணினியில் PC Decrapifier நிருவிய பிறகு இயக்கி கணினியில் தேவையில்லாமல் நிறுவப்பட்ட குப்பைப்பயன்பாடுகளை எளிதில் நீக்கிவிடலாம்.
http://www.pcdecrapifier.com/



ஒரு இணையப்பக்கத்தில் உள்ள எழுத்துப்பிழைகளைக் கண்டறிவது எப்படி?



இந்தச் சேவையை அளிக்கிறது http://spellist.com/ பயன்பாட்டுத்தளம்.http://spellist.com/ ல் உள்ள TextBox ல் இணையப்பக்கத்தின் முகவரி (URL) யை இட்டு Spell Check Page என்பதை அழுத்தினால் போதும்.



அந்தப் பக்கத்தில் எத்தனை வார்த்தைகள் சோதிக்கப்பட்டன, எத்தனை எழுத்துப்பிழைகள் கண்டறியப்பட்டன, அடையாளம் காணமுடியாத வார்த்தைகள் எத்தனை, அவைகள் என்ன என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகள் உடனே தெரிந்துவிடும்.

இந்தத்தளமானது ஆங்கில மொழிக்கு மட்டுமே ஏற்புடையதாக உள்ளது.