Thursday, July 31, 2008

அலை அலையாய்.......

wave Effect, image effects, myspace image effect, myspace image wave effect
உங்கள் புகைப்படங்களை அலை அலையாய் காட்சிப்படுத்த வேண்டுமா? இங்கே முயற்சி செய்யலாம்.

Tuesday, July 29, 2008

முகம் பார்த்து கதைக்கலாம்.....

உங்களிடம் ஒரு வெப்காம் இருந்தால் போதும். இந்த தளத்துக்குள் நுழைந்து முகம் தெரியாத நபர்களுடன் முகம் பார்த்து கதைக்கலாம். இது எல்லாம் வெள்ளை காரங்களுக்குத்தான் சரி.. நமக்கு சரிபடாது ... என்று சொல்லுவது புரியுது... என்றாலும் ஒரு சில அரட்டை பிரியர்களுக்காக......


http://confabio.com/

Friday, July 25, 2008

இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள்

நிமிடங்களுக்குள்ளாகவே அழகான வீடியோ எடிட்டிங்கை எளிமையாகச் செய்து முடிக்க உதவும் அற்புதமான மென்பொருள் இது. வீடியோ சேர்ப்பு / நீக்கு / புகைப்பட வெட்டு / ஒட்டு வேலைகளை அனாயாசமாகச் செய்யமுடியும். வீடியோவில் தலைப்பு வேலைகளையும் இதன்மூலம் செய்யலாம்.


அசைந்தாடும் வண்ணப்படங்கள் உருவாக்க

இணையத்தில் அசைந்தாடும் பேன்னர்களைக் கண்டிருப்பீர்கள். அவற்றை உருவாக்கப் பயன்படும் மென்பொருட்கள் விலை உயர்ந்தவை. இலவசமாக இணையத்தில் அசைந்தாடும் படங்களை [GIF] உருவாக்க ஏதேனும் தளங்கள் உள்ளதா?

ஏன் இல்லாமல்? அதற்காகவே இந்தத்தளம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்தப் பயன்பாட்டையும் நீங்கள் உங்களது கணினியில் நிறுவவேண்டாம். முற்றிலும் இலவசமான இந்தப் பயன்பாட்டை ஒரு முறை பயன்படுத்தித்தான் பாருங்களேன்.
http://gifworks.com/image_editor.html

உரிமை தமிழ்நெஞ்சம்

Sunday, July 20, 2008

எழுத்தில் இருந்து ஒலியாக..

நீங்கள் பல பேர் ஒரு ஒலி வடிவதத்ததிலுக்கும் ஒலியை ( MP3 to WMA) வேறு ஒரு ஒலி வடிவமாக மாற்றியிருப்பீர்கள். அதைப்போல புகைப்படங்களையும் மாற்றியிருக்கலாம். ஆனால் இத்தளத்தில் நீங்கள் பதிவு செய்த பின்னர் வாரிகளை கூட ஒலிவடிவாக மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக உங்களிடம் ஒரு மின்புத்தகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை இருந்து வாசித்துகொண்டிருக்க உங்களுக்கு அலுப்படிக்கிறதா? இருக்கவே இருக்கிறார் இவர். நீங்கள் வைத்திருக்கும் இந்த மின்நூலை அப்படியே ஒலிக்கோப்பாக மாற்றி உங்களை கேட்கவைப்பார்.


ஆனால் இந்த வசதி ஆங்கில , ஜெர்மன் மொழிகளுக்கு மாத்திரமே. தமிழ் மொழிக்கு இந்த வசதியை கொண்டு வருவது எமது கடமை ;-))

செர்ச் மி - முப்பரிமாண தேடு தளம் ( 3D Search Engine)

வழக்கமாக தேடு தளங்கள்(Search Engines) கொடுக்கப்படும் குறி சொற்களுக்கு, சம்பந்தப்பட்ட இணைய தளங்களின் தகவல்களை, இணைய முகவரிகளை வார்த்தைகளில் காண்பிக்கும்.இந்த செர்ச் மி தளம் Searchme அந்த இணைய தளங்களின் முகப்பு பக்கங்களையே படங்களாக காண்பிக்கிறது.அந்த முகப்பு பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி பார்ப்பது போல் ஒரு முப்பரிமான தேடல் வசதியை கொடுக்கிறது இந்த செர்ச் மி தளம்.தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது. முழுமையாக வெளியிடப்படும் போது மேலும் சிறப்பாக தேடும் என எதிர்பார்க்கலாம். குறிப்பு: இந்த தளத்தில் நுழையும்போது Pop-up Blocker ஐ செயலிழக்க செய்யவும்.

தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும் Searchme இந்த தளம் குறித்த வீடியோ படம் கீழே...







உரிமை பிரேம்ஜி

Wednesday, July 16, 2008

பொத்தான்களை வடிவமைக்க....

உங்களுடைய வலைபக்கங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இலவசமாக கண்கவர் பொத்தான்களை (பட்டன்) :-)) வடிவமைக்க வேண்டுமா ? இதோ இத் தளம் உங்களுக்கு உதவலாம்.

Monday, July 14, 2008

புகைப்படங்களை அழகுபடுத்துத்த.....


உங்களிடம் உள்ள புகைப்படங்களை இணையத்தில் வைத்தே மேன்படுத்த இதோ இன்னுமொருதளம். இங்கே அதிக வசதிகள் இல்லாவிடினும். மிக சுலபமாகவும் எளிமையாகவும் செய்ய விரும்புபவர்களுக்கு பயன்படும்.

Sunday, July 13, 2008

கொசுவும் கணனியும்

தலையங்கத்தை பார்த்து விட்டு பல்வேறு கற்பனை குதிரைகளை ஓடவிடாதீர்கள். நான் சொல்லவந்த விடயம் வேற...

அலுவல வேலைகளை வீட்டுகணணில் செய்து கொண்டிருக்கிறீர்களா? நம்ம நுளம்புக்கு கொண்டாட்டம். அவர் உங்களோடு விளையாட ஆரம்பிப்பார். அன்பு,வம்பு முத்தங்கள் எல்லாம் கிடைக்கும்.
என்ன கடி தாங்கவில்லையா?
நான் என் கடியை சொல்லவில்லை. கொசுக்கடியை சொல்கிறேன்.

இருக்கவே இருக்க அதற்கும் ஒரு கணனி மென்பொருள். Anti Mosquito என்னும் மென்பொருளை நீங்கள் பாவித்தால் போதும். நுளம்பார் உங்களோடு விளையாடவே மாட்டார். இந்த மென்பொருள் எழுப்பும் ஒருவித ஒலி அவரை உங்களிடம் அனுக விடாதாம். ஆனால் அந்த ஒலி உங்களுக்கு கேட்கவே கேட்காது. ஆகவே இதை பாவித்து பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

நான் என்னும் பாவனை செய்து பார்க்கவில்லை. ஏனேனில் இங்கே (யேர்மன்) நுளம்புகள் இல்லை. அதனால் எனக்கு இது பயன்பாடாது. நீங்கள் பாவித்துவிட்டு சொல்லுங்கள். எனக்கு இந்த கொசுக்களை விரட்டியடிக்க உதவும் மென்பொருள் போல் தொந்தரவு செய்யும் நன்பர்களை விரட்டியடிக்க ஏதாவது மென் பொருள் இருந்தால் பயன்படும். :-))

Wednesday, July 9, 2008

முழுமையற்ற RAR சிப் வீடியோவை இயக்குவது எப்படி?


இப்போது RAR சிப் செய்ப்பட்டு அதை இணையத்தின் மூலம் பகிர்ந்தளிப்பது சாதாரணமான நிகழ்வு இதில் ஒரு சிக்கல் உண்டு ஒரு இயங்கு ஒளிப்படம்(வீடியோ) பல பாகங்களாக பிரிக்கப் பட்டு பகிரப்பட்டால் அவை அனைத்தும் உங்கள் கரங்ளில் கிடைத்தாலே ஒழிய மற்றும் படி உங்களால் அவற்றில் ஒன்றையேனும் பார்க்க முடியாது
ஆனால் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கிறது இந்த மென்பொருள் http://ds6.ovh.org/drp.htmlஇது நேரடியாக முறையில் சிப் செய்ப்பட்ட எந்தவகை வீடியோவையும் இயக்கும்.
தமிழ்பித்தன்

YouTube வீடியோவை அதியுயர் தரத்துடன் பார்ப்பது எப்படி??

youtubeல் நீங்கள் வீடியோவை பதிவேற்றும் போது உங்கள் வீடியோ தரம் குறைக்கப்பட்டே! பதிவேற்றப்படுமாம். அப்படி தரம் குறைக்கபட்ட வீடியோவை பழைய தரத்துக்கு கொண்டுவர ஒரு வழியுண்டாம். அது நீங்கள் எந்த வீடியோ பார்க்க உள்ளீர்களோ அந்த URL க்குப் பின்னால் &fmt=18 என்பதை சேர்த்து பின் அதை உங்கள் புரவுசரில் பேஸ்ட் செய்யவும் உடனே அது பதிவிறக்க கேட்க்கும் பின் அதை பதிவிறக்கி பார்த்து மகிழவும்

இது அனைத்து youtube வீயோக்களுக்கும் ஒத்துழைக்காது. பெரும்பான்மையான வீடியோக்களுக்கு ஒத்துழைக்கிறது

உதாரணம்:- http://www.youtube.com/watch?v=mOt_RVLg6LE என்ற முகவரியில் வேல் திரைப்பட "கோபக்கார கிளியே" என்ற பாடல் உள்ளது அதை பின்வருமாறு பாவிக்க வேணும்http://www.youtube.com/watch?v=mOt_RVLg6LE&fmt=18
ிற்குறிப்பு:- இது MP4 வடிவத்தில் பதிவிறங்குவதால் அதை பார்க்க ஏதாவது MP4 player உங்களுக்கு தேவைப்படும்பரிந்துரை:- Apple Quick Time Player நன்றி:-sizlopedia


உரிமை தமிழ்பித்தன்

Sunday, July 6, 2008

பிறந்த நாள் தகவல்கள்

உங்கள் பிறந்த நாளை இங்கே தந்தால் அது சம்பந்தப்பட்ட தகவல்களை தொகுக்கிறார்கள், பிறந்த கிழமையிலிருந்து பலன்கள் வரை. அதே போல கடைசியாக இருக்கும் பெயர் பற்றிய தகவல்களும் அருமை.ஆனால் இன்னும் நன்றாக மேம்படுத்தி நல்ல லாபம் பார்க்கலாம், அநேகமாக இந்நேரம் யாராவது செய்யஆரம்பித்திருப்பார்கள்.

windows media center இப்போது இலவசமா??


விண்டோசின் இறுதி இயங்குதளமான வீஸ்டாவுடன் விண்டோஸ் மீடியா சென்ரர் என்றும் வந்தது பல DVD ரசிகர்களை இது வளைத்துப் போட்டுக் கொண்டது. ஆனால் இதோ செயற்பாடுகளுடனும் இடைமுகப்பு தோற்றத்துடனும் MediaPortal எனும் மென் பொருள் வெளியிட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் இலவசமானதும் திறந்த மூல மென்பொருளும் ஆகும்.
இதில்வீடியோக்கள் ((divx, mpeg... .இவையும் இயங்குமாம்))ஓடியோக்கள்போட்டோக்கள்இணைய தொலைக் காட்சிகள் வானொலிகள் ((தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம்...)))வானிலை என பிரமாண்டமான வடிவமைப்பாக காட்சி தருகிறது.
இதில் விண்டோஸ் மீடியா சென்ரரில் இல்லாத வசதிகளாக கேம்ஸ் ((Tetris or Sudoku! இவை உட்பட)) RSS ஐ காட்சிப்படுத்துதல் என மேலும் பல அட்டகாச வசதிகளும் இருக்கிறது.
இதற்க்கு எங்களுக்கு பிடித்தமான இடைமுகப்புக்களுக்கான நீட்சிகளும் கிடைக்கின்றன.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்க்கும் :-http://www.team-mediaportal.com

ஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ

ஒரு கிளிக்கில் அனைத்து திறந்த மூல இணைய செயலிகளைகளை ((Open Source internet applications)) நிறுவ இந்த பொதி உதவும் இதனால் இணைய அறிவு உடையவர்கள் தான் இணையத்தை நிறுவி பயன்படுத்த முடியும் என்ற வரவிலக்கணம் உடைத்தெறியப்படுகிறது.

இதன் பயன்கள்

இலகுவான நிறுவல் மற்றும் பராமரிப்பு ஒரிரு சொடுகளில் அலுவல் முடிந்து விடும்

அனைத்து இயங்குதளத்துக்கும் ஏற்புடையது

அனுமதி உரிமம் உடையது

முற்றிலும் இலவசமானது


தளஇணைப்பு:-http://bitnami.org/

மேலதிக விபரங்களுக்கு:-http://www.makeuseof.com/dir/bitnami/

உரிமை தமிழ்பித்தன்

இசைவடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்


நீங்கள் இசைப்பிரியரா உங்கள் கணணியில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய இசையை உருவாக்க விருப்பமா? கவலையை விடுங்கள் லினக்ஸில் இயங்கக் கூடிய இலவச திறந்த மூல மென்பொருள் உங்களுக்கு உதவும். பல வித ஒலிகளை உருவாக்கவதுடன் உங்களால் அவற்றை கலந்து சிறந்த ஒரு இசையை உருவாக்கவும் முடியும்மேலதிக செய்தி் மற்றும் தரவிறக்கம் :-http://www.hydrogen-music.org

Friday, July 4, 2008

ஆன்லைன் கேம்ஸ்

இலவச விளையாட்டு தளங்கள் நிறைய இருப்பினும் அச்சந்தைக்குள் இத்தளம் புதிது.மற்ற தளங்களின் இலவச கேம்களை இங்கே தொகுத்திருக்கிறார்கள், ப்ளாஷ் கேம்கள் என்பதால் சில நிமிடங்களில் லோட் ஆகி விடும்.

Camtasia Studio - 5 இப்போது இலவசமாக

Camtasia Studio ஆனது கணணித் திரையில் இயங்கும் செயற்பாடுகளை வீடியோவாக படம்(screencasting software) பிடிக்க உதவும். இந்த மென்பொருள் இதுவரை காலமாக தன் விலை நிர்ணயத்தை $300 என்றே வைத்திருந்தது. ஆனாலும் சில நாட்களுக்கு முன் இதை இலவசமாக அறிவித்து அசத்தியிருக்கிறார்கள் tech smith நிறுவனத்தார். இந்த மென்பொருளைக் கொண்டு கணணித் திரையில் நடப்பவற்றை மிகவும் துல்லியமாக வீடியோப் படமாக்க முடியும் iPod, Flash movies, QuickTime and Windows Media ஆகிய வகைக் கோப்புக்களில் இதன் வீடியோக்களை சேமித்துக் கொள்ளலாம்.

இந்த மென் பொருளை பாவித்துத்தான் ரவிசங்கர் அண்ணா பல இணைய விளக்கப்படங்களை எடுத்தவர்(இங்கே). இது இப்பொது இலவசமாக கிடைப்பதால் தன்னார்வ இணைய வழி வழிகாட்டல்கள் (கல்வி) அதிகரிக்கும் என நம்பலாம்.

இதை பதிவிறக்க இங்கே
இலவசமாக பதிந்து கொள்ள இங்கே


பதிப்புரிமை தமிழ்பித்தன்

ஒலிப்பதிவுகளில் உள்ள ஒலிகளை தரவிறக்க!

eSnips, Imeem, iJigg, Last.fm, Pandora, Myspace, eSnips, Mog, என எங்கிருந்தாலும் ஒரு கிளிக்கில் பதிவிறக்க உதவுகிறது.











1) install;-- இந்த சுட்டியை கிளிக் செய்து Free Music Zilla என்ற மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.











2) இப்போது நீங்கள் மேலே கூறிய ஏதாவது தளத்துக்கு சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய பாடலை இயங்கச் செய்யவும் அப்போது நீங்கள் நிறுவிய Free Music Zilla பதிவிறக்கவா என கேட்கும். நீங்கள் "Download" எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் அப்பாடல் தரவிறக்கப்படும்.







தரவிறக்க தயாராகவுள்ள காட்சி





தளமுகவரி:--- http://www.freemusiczilla.com



உரிமை தமிழ்பித்தன்

Thursday, July 3, 2008

அதிசய மெயில் அறிமுகம்!

ஆங்கில ஊடகங்களின் உச்ச பட்ச ஆதரவுடனும் பலரின் எதிர்பார்ப்புடனும் இவர் களத்தில் இறங்குகிறார்பலருக்கு யாகூ ஜீமெயில் எனப் பாவித்து அலுத்து விட்டது. ஏதாவது புதுசா தினிசா ஏதாவது மெயில் வசதியிருக்கா எனத்தேடிப் பார்த்த வேளையில் பல அருமையான வசதிகளை கொண்டிருக்கிறது தெரிகிறது.இதிலுள்ள வசதிகள்*அனுப்பிய மின்னஞ்சலை மீளப் பெற்றுக் கொள்ளலாம்

*வரையறையற்ற இடக்கொள்ளளவு

*அதிகூடிய மின்னஞ்சல் பதிவேற்றம் (attachment)

*வீடியோ மெயில்

*அதியுயர் ஸ்பாம் வைரஸ் பாதுகாப்பு

*விரும்பிய மின்னஞ்சல்களிலிருந்து அனுப்புவது போல அனுப்பலாம்

*இலகுவான முறையில் அனிமேசன் எபெக்ற் செய்து அனுப்பும் வசதி.



மேலும் பல வசதிகள்.....http://www.bigstring.com/

50 GB வரையான பைல் சேமிப்பான்

இது 50GB வரையான பைல்களை சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

* அனைத்து வகையான பைல்களையும் ஏற்றுக் கொள்கிறது

* அதிவிரைவான பதிவேற்ற இறக்கம்

* பைலுக்கு கொள்ளளவு வரையறை இல்லை



http://www.adrive.com/



மேலதிக தகவல் இங்கே

Wednesday, July 2, 2008

பைல் சேமிப்பு தளங்கள் பத்து

#1 RapidShare
தரவேற்ற 100 MB வரை அனுமதிக்கிறார்கள் பதிவேற்ற பதிவிறக்க வேகம் பெயருக்கேற்றால் போல் அமைந்து இருக்கிறது ஆனால் இதன் தரவிறக்கத்தில் தான் பிரச்சினையே கட்டண பதிவர்கள் பிரச்சினை இன்றி பதிவிறக்கலாம் மற்றவர்கள் பலவாறு காத்திருக்க வேண்டும் பதிவிறக்க.

#2 MediaFire
இதன் பைல் பாதுகாப்பு நிறைந்தது

#3 Badongo
இதில் 1 GB வரை பதிவேற்றலாம்

#4 zShare
images, videos, audio and flash ஆகியபைல்களை பதிவேற்றி பகிர்நது கொள்ளலாம்

#6 EasyShare
1oo MB பதிவேற்றம் இலகுவானது

#7 FileFactory

#8 XTube

#9 Megarotic

#10 FileDen

ஒரே தடவையில்....

ஓரே தடவையில் நீங்கள் விரும்பும் அனைத்து பைல் சேமிப்புத் தளங்களிலும் உங்கள் பைலை பதிவேற்றலாம் இதற்க்கு இந்த தளம் உதவுகிறது.





http://tinyload.com

அசத்தும் பைல் சேமிப்பான்



பல சேமிப்பானை பார்த்திருப்பீர்கள். இது மாதிரி பார்த்திருக்க மாட்டீர்கள். இவர் வழியே தனிவழி என்று நம் தலையை மாதிரி பில்டப் எல்லாம் விடுகிறார். ஓரு பைல்லின் கொள்ள 500MB எனக் கூறுகிறது. இது பகிர்ந்து கோள்வதற்க்கு

உங்கள் தனிப்பாவனைக்கு 2GB என அசத்தல் அட்டாகாச அறிவிப்புகளுடன் வெளிவந்திருக்கிறது((இதுவும் 500mb வரை இருக்கலாம் என்றே தொன்றுகிறது))

வலைப்பூவுக்கு widget எல்லாம் தாறாங்கலாம். ம்..ம் என்னதான் இருந்தாலும் பாருங்கோ யாரும் rapid share ஐ விட்டுட்டு வரமாட்டார்கள் தானா,??



http://www.driveway.com/

Tuesday, July 1, 2008

ஜிமெயில் புதிய வசதிகள்





கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன.








புதிய நட்சத்திர குறிகள்




நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய மின்னஞ்சல்களை நட்சத்திரமிட்டு வைக்க இந்த வசதி கைகொடுத்து வந்தது. ஆனால் அதிகளவான மின்னஞ்சல்கள் நடசத்திரமிடப்படும்போது அவற்றில் முக்கியமானவற்றை கண்டு பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு தீர்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
















அரட்டையில் படங்கள்.




ஜிமெயில் சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒன்று அரட்டை. அதில் மிக முக்கியமான ஒரு வசதியை ஜிமெயில் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இதன்மூலம் அரட்டை செய்பவரின் புகைப்படம் கீழ்காட்டப்படவாறு அரட்டை வின்டோவில் தெரியும்.












இலகுவான தொடுப்புக்கள் அமைக்கும் வசதி


இதன் மூலம் நாம் அடிக்கடி ஜிமெயிலில் செய்யும் வேலைகளுக்கு குறுக்கு வழியொன்றை (Shortcut) ஒன்றினை அமைத்துக்கொள்ள முடியும்.












ஒரு பட்டனில் அனைத்தையும் பதிவிறக்க

நீங்கள் இணையத்தில் பார்கின்ற வீடியோவோ அல்லது ஓடியோவோ எதுவானாலும் நீங்கள் ஒரு பட்டனை தட்டுவதனால் அதை தரவிறக்கி கொள்ளலாம். இது பயர்பொக்ஸின் நீட்சியே.((EX பாவிப்போர் தயவு செய்து முறைத்துப் பார்க்க வேண்டாம்இங்கே சென்று நீட்சியை பதிவிறக்கி நிறுவுகபயர்பொக்ஸ் உலாவியின் வலது பக்க கீழ் மூலையில் உள்ள படத்தில் காட்டப்பட்ட பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் பார்த்திக் கொண்டிருக்கும் மீடியா பைலை தரவிறக்கலாம்.

iphone unlock மென்பொருள்

ஐபோனை unlock செய்ய முடியும் என சில நாட்களுக்கு முன் ஒரு அறிந்திருப்பீர்கள் unlock மென் பொருள் கீழே இருக்கிறது. அதை வைத்து unlock செய்ய முடியுமாம்



இங்கே



இப்படி தானாம் செய்வது







மேலதிக செய்தி;-http://www.iphonesimfree.com



உரிமை தமிழ்பித்தன்