Sunday, July 6, 2008

windows media center இப்போது இலவசமா??


விண்டோசின் இறுதி இயங்குதளமான வீஸ்டாவுடன் விண்டோஸ் மீடியா சென்ரர் என்றும் வந்தது பல DVD ரசிகர்களை இது வளைத்துப் போட்டுக் கொண்டது. ஆனால் இதோ செயற்பாடுகளுடனும் இடைமுகப்பு தோற்றத்துடனும் MediaPortal எனும் மென் பொருள் வெளியிட்டிருக்கிறார்கள் இது முற்றிலும் இலவசமானதும் திறந்த மூல மென்பொருளும் ஆகும்.
இதில்வீடியோக்கள் ((divx, mpeg... .இவையும் இயங்குமாம்))ஓடியோக்கள்போட்டோக்கள்இணைய தொலைக் காட்சிகள் வானொலிகள் ((தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம்...)))வானிலை என பிரமாண்டமான வடிவமைப்பாக காட்சி தருகிறது.
இதில் விண்டோஸ் மீடியா சென்ரரில் இல்லாத வசதிகளாக கேம்ஸ் ((Tetris or Sudoku! இவை உட்பட)) RSS ஐ காட்சிப்படுத்துதல் என மேலும் பல அட்டகாச வசதிகளும் இருக்கிறது.
இதற்க்கு எங்களுக்கு பிடித்தமான இடைமுகப்புக்களுக்கான நீட்சிகளும் கிடைக்கின்றன.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்க்கும் :-http://www.team-mediaportal.com

No comments: