Friday, December 26, 2008

twiiter ஐ இப்போது gmail லிருந்த படியே ட்விட்டலாம்





நீங்கள் ஜீமெயில் பாவிப்பவரா?? அடிக்கடி நண்பர்களுடன் ட்விட்டரில் அரட்டுபவரா?? அப்படியாயின் நீங்கள் கட்டாயம் இதை தொடர்ந்து வாசிக்க வேணும்...

தற்போது twitter ஐ உங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஆக பொதிந்து கொள்ள முடியும்.

http://www.twittergadget.com/gadget_gmail.xml

என்பதை


setting ---> gadget---->பின் வரும் பெட்டிக்குள் URL ஐ பொதிந்து விட்டு add செய்து விடுங்கள் பின் ஒரு தடவை refresh செய்தால் ஜிமெயில் அரட்டை பெட்டிக்கு கீழே உங்கள் twiiter பெட்டியை காணலாம். பிறகென்ன! கணக்கை உள்நுழைந்து அடித்து நொருக்க வேண்டியதுதானே!


அப்படி இன்னமும் தங்கள் ஜிமெயில் கணக்கில் gadget ஐ Enable செய்யாதவர்கள்.

setting--> Lab--> Add any gadget by URL ---> select enable


என்னது இவ்வளவு சொல்லியும் புரியலயா???
புறப்படுங்க இங்க



Friday, December 12, 2008

நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது எப்படி?



"ஆல் இந்தியா ரேடியோ. செய்திகள் வாசிப்பவர் : சரோஜ் நாராயண் சாமி", இந்தக்குரலைக் கேட்காத வானொலி ரசிகர்கள் இருக்க முடியாது. அவர் குரலின் கம்பீரம் எல்லோருக்கும் பிரசித்தமான ஒன்று.

அவர் செய்திகளை வாசிக்கும்போது வேற்று நாட்டினரின் பெயர்களை உச்சரிப்பதில் மகா சிரத்தையுடன் இருப்பார்.

"வாழப்பாடி ராமமூர்த்தி" என்கிறவரின் பெயரை "வாழப்பாடி ரமாமூர்த்தி" என்று கூறிவிடக் கூடாது.

நான் பார்த்த ஆங்கிலச் சேனலில், "குமரி அனந்தன்" என்கிறவரது பெயரைக் "குமாரி ஆனந்தன்" எனத் தவறாக உச்சரித்தனர்.

இது நாள்தோரும் நடக்கின்ற ஒன்று. இந்திய "கால் செண்டர்"களில் பணிபுரிபவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுக்கிறார்கள் - எவ்வாறு அடுத்த நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது என்பது பற்றி.

நான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :

http://www.howtosaythatname.com/

இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின் ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.

பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.

சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.


http://www.howtosaythatname.com/