Friday, December 12, 2008
நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது எப்படி?
"ஆல் இந்தியா ரேடியோ. செய்திகள் வாசிப்பவர் : சரோஜ் நாராயண் சாமி", இந்தக்குரலைக் கேட்காத வானொலி ரசிகர்கள் இருக்க முடியாது. அவர் குரலின் கம்பீரம் எல்லோருக்கும் பிரசித்தமான ஒன்று.
அவர் செய்திகளை வாசிக்கும்போது வேற்று நாட்டினரின் பெயர்களை உச்சரிப்பதில் மகா சிரத்தையுடன் இருப்பார்.
"வாழப்பாடி ராமமூர்த்தி" என்கிறவரின் பெயரை "வாழப்பாடி ரமாமூர்த்தி" என்று கூறிவிடக் கூடாது.
நான் பார்த்த ஆங்கிலச் சேனலில், "குமரி அனந்தன்" என்கிறவரது பெயரைக் "குமாரி ஆனந்தன்" எனத் தவறாக உச்சரித்தனர்.
இது நாள்தோரும் நடக்கின்ற ஒன்று. இந்திய "கால் செண்டர்"களில் பணிபுரிபவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுக்கிறார்கள் - எவ்வாறு அடுத்த நாட்டினரின் பெயர்களைத் தெளிவாக உச்சரிப்பது என்பது பற்றி.
நான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :
http://www.howtosaythatname.com/
இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின் ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.
பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.
சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.howtosaythatname.com/
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி
Post a Comment