Monday, September 29, 2008

விண்டோஸ் எக்ஸ்ப்ளோரருக்கு ஒரு மாற்று



ஒவ்வொரு மென்பொருளுக்கும் அதைவிடப் பலமடங்கு திறன் வாய்ந்த இலவச மென்பொருட்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றை கடந்த பதிவுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

அந்த வரிசையில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர்க்கு ஒரு மாற்றுப்பயன்பாடாக அல்ட்ரா எக்ஸ்ப்ளோரரை கூறலாம்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.





ஆறு இலவச மென்பொருள்கள் உங்களுக்காக






இவை அனைத்தும் பற்றிய மேலதிகத் தகவல்களும், இணையிறக்கச் சுட்டிகளையும் பெற அந்தந்தப்படங்களின் மேல் சொடுக்கவும்.

3ஜிபி வீடியோ மாற்றி
எஃப்.எல்.வி - மாற்றி
எஃப்.எல்.வி - எம்பி3 மாற்றி
டிவிடி ரிப்பர்
கணினித் திரையை படம் பிடிப்போன்





Monday, September 22, 2008

தொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை தொலைத்துக்கட்ட

எத்தனையோ முறை விண்டோஸ் இயங்குதளம் முரண்டு பிடித்திருக்கிறது.
எதாவது ஒரு தளத்தைப் பார்வையிடும்போதோ, குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தும்போதோ இயங்குதளம் கேட்பாரின்றி அப்படியே கிடக்கும்.

இதை ஹேங்கிங் [ HANGING] என்பார்கள். என்ன செய்தாலும் நமது கட்டுக்குள் வந்து தீராது.

உலாவி கூடப் பல நேரங்களில் அப்படியே நின்று நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும்.
அப்போது அந்த அப்ளிகேசனை அப்படியே நிறுத்திவிட முயற்சி செய்வோம். எதுவும் நடக்காது.

இந்த மாதிரியான சமயத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இணையத்தில் உள்ளது.





http://www.stylet-software.com/click-gone-setup.exe


http://www.stylet-software.com




உரிமை தமிழ்நெஞ்சம்

பழசும் போச்சு, புதுசும் போச்சா? பயப்படாதீங்க.

பழைய மென்பொருள் பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கு மாறுவது எளிதே.

சில நேரங்களில் நமது கணினி புதிய வெர்சனை ஏற்றுக்கொள்ளாவிடில் என்ன ஆகும்?

பழைய வெர்சனும் அழிந்து போகியிருக்கும்.
புதிய வெர்சனும் இன்ஸ்டால் ஆகியிருக்காது.
வெறுப்பு வந்ததுதான் மிச்சம்.

இந்த மாதிரியான சங்கடமான நேரங்களில்,
நமக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு மென்பொருளின் பழைய வெர்சன்களைச் சேகரித்து வைத்துள்ளார்கள்.

அதுவும் எளிமையாக இணையிறக்கம் செய்யக்கூடிய வகையில்.

இந்தத் தளங்களில் சென்று தேவையான மென்பொருளின் பழைய வெர்சனை, பழைய பதிப்பை இணையிறக்கம் செய்து அதை நிறுவிப் பயன்பெறலாம்.

இங்கே 3 தளங்களை அறிமுகம் செய்கிறேன்.

http://www.old-software.com/
http://www.oldapps.com
http://www.oldversion.com



உதாரணமாக நெருப்பு நரி - இணைய உலாவியின் பழைய பதிப்புகளின் தொகுப்புகள் இங்கே உள்ளன.

http://www.old-software.com/software-119-firefox.html
http://www.oldversion.com/program.php?n=firefox
http://www.oldapps.com/mozilla.htm





உரிமை தமிழ்நெஞ்சம்

Monday, September 15, 2008

விண்டோஸ் நோட்பேடுக்கு ஒரு மாற்று




விண்டோஸ் நோட்பேட் பயன்படுத்துபவர்கள் இந்த இலவச மென்பொருளையும் பயன்படுத்தலாம். அதற்குப் பதிலாக இது.

இது விஸ்ட்டா இயங்குதளத்திலும் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு : editpadlite

வெர்ச்சுவல் டப் - இலவச மென்பொருள்

வெர்ச்சுவல் டப் என்பது ஒரு இலவச மென்பொருள். ஒலி/ஒளி வெட்டு/ஒட்டு வேலைகளைச் செய்ய உதவும் மென்பொருள் பயன்பாடு.

இது அடோப் பிரீமியருக்கு ஒரு மாற்றுக் குறைவாக இருந்தாலும், மிக மிக வேகமான இயங்குதிறன் கொண்டது.

மேலும் விபரங்களுக்கு : VirtualDub




உரிமை தமிழ்நெஞ்சம்

டோட்டல் மீடியா பிளேயர் - இலவச மென்பொருள்

மீடியா ப்ளேயரைப் பயன்படுத்தாத ஆளே இணையத்தில் இல்லை எனலாம். ஆனால் அது இயங்குதளத்தின் திறனை எக்கச்சக்கமாக வீணடிக்கிறது என்பது நிறையப்பேருக்குத் தெரியாமலேதான் இருக்கிறது.

ஒரே ஒரு ப்ளேயரின் மூலம் ஏராளமான வகைப்பட்ட ஒலி / ஒளிகளை எளிதாக இயக்குவதற்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது. ஆனால் இது இயங்குதளத்தின் திறனைப் பாதிக்காமலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்க நற்செய்தி.



http://www.effectmatrix.com/total-video-player/index.htm





உரிமை தமிழ்நெஞ்சம்




Wednesday, September 10, 2008

Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்

அடொப் நிறுவனம் தனது புதியதொரு சேவையாக Acrobat.com இனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இணையத்தளம் மூலம்




  • எங்களுக்கு தேவையான வேர்ட் கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்.
  • PDF கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்
  • கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
  • அத்தோடு இணைய மாநாடுகளையும் நடாத்த முடியும்.

இங்க சொடுக்கி போய் பாருங்க…

உரிமை பகீ

Saturday, September 6, 2008

கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா?

கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம்.

நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம்,ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும்.

உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு நாம் கட்டணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஃபைன் ரெகவரி மென்பொருளுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை.

நாம் கோப்புகளை நீக்கும்போதோ அல்லது அழிக்கும்போதோ, விண்டோஸ் அதனை முழுதும் ஒழித்து மூடி விடுவதில்லை. மாறாக டிரைவில் அதனை மறைத்து வைத்திருக்கும். ஃபைன் ரெகவரி மென்பொருள் உங்கள் கணினியை முழுதும் ஸ்கேன் செய்து நீங்கள் நீக்கியதாக நினைத்து அஞ்சிய கோப்புகளை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.

இந்த மென்பொருள் வைரஸ் தாக்குதலால் வீணாய்ப் போன கோப்புகளையும் மீட்டுத் தரவல்லது.

மேலும் மின் தடை மற்றும் ஹார்டு ட்ரைவில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சேதமடையும் கோப்புகளையும் இந்த மென்பொருள் மீட்டுத் தரும்.





நீக்கிய கோப்புகளைத் திரும்பப் பெற முதலில் இந்த மென்பொருளைத் திறக்கவும். இந்த மென்பொருள், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதான வழிமுறைகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மென்பொருளைத் திறந்தவுடன் ஃபைல் என்பதை கிளிக் செய்து பிறகு ஸ்கேனை கிளிக் செய்க. ஃபைன் ரெகவரி உடனேயே நீக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும். இந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கு தேவையான கோப்பை ரைட் கிளிக் செய்க.

அந்த பெட்டியில் இது பாப் அப் ஆகும். இப்போது ரெகவர் என்பதை கிளிக் செய்து சேமிக்கவும். இவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.

அனைத்து விதமான விண்டோஸ் பயன்பாடுகளிலும் ஃபைன் ரெகவரி மென்பொருள் வேலை செய்யும். யு.எஸ்.பி. ஸ்டோரேஜ் டிவைஸிலிருந்தும் இதனை இயக்கலாம்.

http://www.finerecovery.com/finerecovery.exe





தமிழ்நெஞ்சம்

இறந்த காலத்துக்குச் செல்வோமா?

கண்டிப்பாக இது புரியாத புதிரில்லை. இன்டர்னெட் ஆர்கைவ் வே பேக் மெசின்வாயிலாக இது சாத்தியமே.

இந்தத் தளத்தில் எந்த யுஆரெல் இடுகிறோமோ அந்த இணையத்தளத்தின் வீட்டுப்பக்கங்கள் எந்தெந்த திகதிகளில் அப்டேட் செய்யப்பட்டன என்ற விபரமும், அந்த லிங்க்கை அழுத்தினால் அந்தப் பழைய திகதியில் கொடுக்கப்பட்ட தளத்தின் முகப்புத் தோற்றம் எவ்வாறு இருந்தது என்பதற்கான ஆதாரமும் கண்ணெதிரே தோன்றுகிறது.





உரிமை தமிழ்நெஞ்சம்


ரியல் மீடியாவை எம்பி3 ஆக மாற்ற இலவச மென்பொருள்

ரியல் மீடியாவகையறாக்களை எம்பி3 வகைக் கோப்புக்களாக மாற்றி ஐ-பாடு இன்னபிற கருவிகளில் கேட்பதற்கு உதவும் எளிய முகப்பு கொண்ட இனிய மென்பொருள் உங்கள் அறிமுகத்திற்காக.

http://www.rm-mp3.org/free-rm-mp3-converter.exe
http://www.rm-mp3.org/


உரிமை தமிழ்நெஞ்சம்


Thursday, September 4, 2008

கூகிள் எல்லோருக்கும் தெரியும். டூகிள் தெரியுமா?



டூகிள் தேடுபொறியில் ஆங்கிலத்தில் - Rajinikanth - என்று தட்டெழுதி என்டரியவுடன் Rajinikanth ன் படம் - Rajinikanth - என்னும் வார்த்தைகளாலே வருகிறது.

உரிமை தமிழ்நெஞ்சம்

கேஜிபி சுருக்கி-விரிப்போன்

வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம்.

உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான்.

இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம்
http://kgbarchiver.net/?page=download

உரிமை தமிழ்நெஞ்சம்

மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்


மைக்ரோசாப்ட் வழங்குகிறது 5 ஜிபி அளவுக்கு இலவச கோப்புப்பகிர்வான் சேவை.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா முதலிய குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவை பீட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால் 1 ஜிபி அளவே வழங்கப்பட்டு வந்தது.

இப்போது ஆஸ்திரேலியா, பிரான்சு, ஸ்விஸ்ஸ்ர்லாந்து, கனடா மற்றும் இன்னபிற நாடுகளிலிருந்து இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆரெஸ்ஸெஸ் பயன்பாடும் உள்ளது. இந்தச் சேவைக்கு விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் என்று பெயர்.

கோப்பு - மற்றும் போல்டர்களை - உங்களது இணையத்தளத்திலோ / வலைப்பூவிலோ நேரடியாக பொதிந்து (எம்பெட்) வழங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

உங்கள் வலையைப் படிப்பவர்கள் அதில் இருந்தபடி நேரடியாக கோப்புகளை இறக்கிக்கொள்ளலாம். தனியாக வேறு தளத்துக்குச் செல்லவேண்டிய அவதி இல்லை.

ஏஓஎல் தளமும் இதே போன்று 5 ஜிபி அளவுக்கு இளவச கோப்புப்பகிர்வான் சேவையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://skydrive.live.com/
http://skydriveteam.spaces.live.com/


உரிமை தமிழ்நெஞ்சம்

வைரசு இருக்கா? இல்லையா?

 
உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.

உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும். இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்போது சோதனை மேல் சோதனை போதுமடா சாமியென்று ஏன் பாடவேண்டும்.

முடிவுகள் இவ்வாறு தெளிவான அறிக்கையாகக் கிடைக்கிறது.



கீழ்க்கண்ட வைரசு எதிர்ப்பான்கள் இந்த சேவையில் பங்கு வகிக்கின்றன
AhnLab (V3)
Aladdin (eSafe)
ALWIL (Avast! Antivirus)
Authentium (Command Antivirus)
Avira (AntiVir)
Bit9 (FileAdvisor)
Cat Computer Services (Quick Heal)
ClamAV (ClamAV)
CA Inc. (Vet)
Doctor Web, Ltd. (DrWeb)
Eset Software (ESET NOD32)
ewido networks (ewido anti-malware)
Fortinet (Fortinet)
FRISK Software (F-Prot)
F-Secure (F-Secure)
AVG Technologies (AVG)
Hacksoft (The Hacker)
Ikarus Software (Ikarus)
Kaspersky Lab (AVP)
McAfee (VirusScan)
Microsoft (Malware Protection)
Norman (Norman Antivirus)
Panda Security (Panda Platinum)
Prevx (Prevx1)
Rising Antivirus (Rising)
Secure Computing (Webwasher)
Softwin (BitDefender)
Sophos (SAV)
Sunbelt Software (Antivirus)
Symantec (Norton Antivirus)
VirusBlokAda (VBA32)
VirusBuster (VirusBuster)

முகவரி: http://www.virustotal.com/



  உரிமை தமிழ்நெஞ்சம்

Monday, September 1, 2008

தொழில்நுட்பம் கற்றுக்கொள்ள இலவசச் சலனப்படங்கள்

 
அடோபி போட்டோஷாப்
அடோபி ஃப்ளாஷ்
அடோபி டிரீம் வீவர்
மைக்ரோசாப்ட் வேர்ட் 2007
மைக்ரோசாப்ட் எக்சல் 2007
மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் 2007
மைக்ரோசாப்ட் ஆக்சஸ் 2007
சி.எஸ்.எஸ். மற்றும் சி.இ.ஓ முதலியவற்றுக்கான பயிற்சி குறித்த சலனப்படங்கள் இந்தத்தளத்தில் இலவசமாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாகப் புதியவர்களுக்குப் பயன்படும்.

 உரிமை தமிழ்நெஞ்சம்