Monday, September 22, 2008

பழசும் போச்சு, புதுசும் போச்சா? பயப்படாதீங்க.

பழைய மென்பொருள் பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கு மாறுவது எளிதே.

சில நேரங்களில் நமது கணினி புதிய வெர்சனை ஏற்றுக்கொள்ளாவிடில் என்ன ஆகும்?

பழைய வெர்சனும் அழிந்து போகியிருக்கும்.
புதிய வெர்சனும் இன்ஸ்டால் ஆகியிருக்காது.
வெறுப்பு வந்ததுதான் மிச்சம்.

இந்த மாதிரியான சங்கடமான நேரங்களில்,
நமக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு மென்பொருளின் பழைய வெர்சன்களைச் சேகரித்து வைத்துள்ளார்கள்.

அதுவும் எளிமையாக இணையிறக்கம் செய்யக்கூடிய வகையில்.

இந்தத் தளங்களில் சென்று தேவையான மென்பொருளின் பழைய வெர்சனை, பழைய பதிப்பை இணையிறக்கம் செய்து அதை நிறுவிப் பயன்பெறலாம்.

இங்கே 3 தளங்களை அறிமுகம் செய்கிறேன்.

http://www.old-software.com/
http://www.oldapps.com
http://www.oldversion.com



உதாரணமாக நெருப்பு நரி - இணைய உலாவியின் பழைய பதிப்புகளின் தொகுப்புகள் இங்கே உள்ளன.

http://www.old-software.com/software-119-firefox.html
http://www.oldversion.com/program.php?n=firefox
http://www.oldapps.com/mozilla.htm





உரிமை தமிழ்நெஞ்சம்

No comments: