கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம்.
நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம்,ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும்.
உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு நாம் கட்டணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஃபைன் ரெகவரி மென்பொருளுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை.
நாம் கோப்புகளை நீக்கும்போதோ அல்லது அழிக்கும்போதோ, விண்டோஸ் அதனை முழுதும் ஒழித்து மூடி விடுவதில்லை. மாறாக டிரைவில் அதனை மறைத்து வைத்திருக்கும். ஃபைன் ரெகவரி மென்பொருள் உங்கள் கணினியை முழுதும் ஸ்கேன் செய்து நீங்கள் நீக்கியதாக நினைத்து அஞ்சிய கோப்புகளை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
இந்த மென்பொருள் வைரஸ் தாக்குதலால் வீணாய்ப் போன கோப்புகளையும் மீட்டுத் தரவல்லது.
மேலும் மின் தடை மற்றும் ஹார்டு ட்ரைவில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சேதமடையும் கோப்புகளையும் இந்த மென்பொருள் மீட்டுத் தரும்.
நீக்கிய கோப்புகளைத் திரும்பப் பெற முதலில் இந்த மென்பொருளைத் திறக்கவும். இந்த மென்பொருள், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதான வழிமுறைகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருளைத் திறந்தவுடன் ஃபைல் என்பதை கிளிக் செய்து பிறகு ஸ்கேனை கிளிக் செய்க. ஃபைன் ரெகவரி உடனேயே நீக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும். இந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கு தேவையான கோப்பை ரைட் கிளிக் செய்க.
அந்த பெட்டியில் இது பாப் அப் ஆகும். இப்போது ரெகவர் என்பதை கிளிக் செய்து சேமிக்கவும். இவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
அனைத்து விதமான விண்டோஸ் பயன்பாடுகளிலும் ஃபைன் ரெகவரி மென்பொருள் வேலை செய்யும். யு.எஸ்.பி. ஸ்டோரேஜ் டிவைஸிலிருந்தும் இதனை இயக்கலாம்.
http://www.finerecovery.com/finerecovery.exe
தமிழ்நெஞ்சம்
1 comment:
உபயோகமான ஒரு தகவலுக்கு நன்றி!
வேர்டில் ஒரு ஃபைலை சேமிக்கும்போது தவறுதலாக ஏற்கனவே ஃபைல் உள்ள அதே பெயரில் கொடுத்துவிட்டால், ரீப்ளேஸ் பண்ணவா என்று கேட்கும். நாமும் ஓகே என்று கொடுத்துவிட்டால் ரீப்ளேஸ் ஆகிவிடும்! அப்படி ஆகிவிட்டால் பழைய ஃபைலை மீட்க முடியுமா?
தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
Post a Comment