Sunday, August 27, 2006

கணனி wallpapers

நான் மாதம் இருதடவை என் கணனியின் முகப்பில் உள்ள wallpaperஜ மாற்றுவேன். அதற்காக இணையம் உலாவும் போது அழகான படங்களை சுடுவது வழக்கம். ஆனால் என்ன அவை அனைத்திலுமே அந்த இணையப்பக்கத்தின் இணைய முகவரி எழுதப்பட்டிருக்கும். :-( ஆனால் அண்மையில் இத்தளத்திற்கு சென்றபோது கண்கவர் பல wallpapers என் கண்ணில் பட்டன. அவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பயன்படட்டும் என நினைத்தே இங்கே பதிகிறேன்.


{அதுசரி wallpaper கு தமிழ் என்னங்கோ? யாராவது சொல்லுங்கப்பா? }

Monday, May 29, 2006

இணைய வடிவடைப்பு

இணையத்தின் மூலம் எத்தனையோ கல்விகளை இன்று கற்க முடியும். அண்மையில் நான் தமிழ்கவிதை பொழுதுபோக்குத்தளத்தை  உருவாக்க முயற்சி செய்தபோது HTML , JAVASCRIPT , CSS , XHTML போன்றவற்றறில் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கு மிகவும் உதவியது இந்ததளம்தான். இங்கே இணையபக்கவடிவமைப்புக்கு வேண்டிய பெரும்பாலான பாடங்கள் தெளிவான விளக்கங்களுடனும் சுலபமான ஆங்கில மொழியோடும் அடுக்கப்பட்டிருக்கின்றன. விளங்க முடியாத ஆங்கில வார்த்தைகளை விளங்கிகொள்ளத்தான் நம்மட கூகிள்மொழிமாற்றி இருக்கிறாரே.

Thursday, March 2, 2006

CoolToad எனும் வலைப்பக்கம்

அண்மையில் என் நன்பன் ஒருவனுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது ஒரு வலைத்தளத்தின் முகவரி கிடைத்தது. நான் சிறுவயதில் கேட்ட பாடல்கள் என்னால் இன்றும் மறக்கமுடியாதவை. அப்படிப்பட்ட பாடல்களை நான் எண்ணற்ற வலைத்தளங்களில் தேடியும் எனக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சில பாடல்களை இவ்வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொண்டேன். நீங்கள் அங்கே சென்று தங்களை பதிந்து கொண்ட பின் பாடல்களை தறவிறக்கலாம். நீங்களும் உங்களிடமுள்ள பாடல்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அத்தளத்தின் முகவரி:- www.cooltoad.com. நான் இணைத்தவை :- http://as01.cooltoad.com/go/music?user=tharsan29&go=1

Wednesday, January 25, 2006

இலவச தொலைபேசி "voipstunt"

Australia, Austria, Belgium, Canada, Chile, China, Croatia, Cyprus, Denmark, Finland, France, Germany, Gibraltar, Hong Kong, Hungary, Iceland, Ireland, Italy, Japan, Liechtenstein, Luxembourg, Malaysia, Monaco, Netherlands, New Zealand, Norway, Poland, Portugal, Singapore, South Korea, SpainSweden, Switzerland, Taiwan, United Kingdom,United States போன்ற நாடுகளுக்கு இலவசமாக தொலைபேச முடியும். (free only landline) நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் இந்த இணையபக்கத்திற்கு சென்று அங்கேயிருக்கும் இலவச மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் தொலைபேசலாம்

{குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம்.}

Sunday, January 15, 2006

இலவச மென்பொருள் இணையப்பக்கங்கள் தயாரிக்க.

இது ஒரு இலவச மென்பொருள். பொரன்ட்பேச் மாதிரி பல சிறப்புகள் உண்டு முயன்றுபாருங்கள். இந்த வலையில் தரவிறக்கலாம்

http://www.bluevoda.com/