தலையங்கத்தை பார்த்து விட்டு பல்வேறு கற்பனை குதிரைகளை ஓடவிடாதீர்கள். நான் சொல்லவந்த விடயம் வேற...
அலுவல வேலைகளை வீட்டுகணணில் செய்து கொண்டிருக்கிறீர்களா? நம்ம நுளம்புக்கு கொண்டாட்டம். அவர் உங்களோடு விளையாட ஆரம்பிப்பார். அன்பு,வம்பு முத்தங்கள் எல்லாம் கிடைக்கும்.
என்ன கடி தாங்கவில்லையா?
நான் என் கடியை சொல்லவில்லை. கொசுக்கடியை சொல்கிறேன்.
இருக்கவே இருக்க அதற்கும் ஒரு கணனி மென்பொருள். Anti Mosquito என்னும் மென்பொருளை நீங்கள் பாவித்தால் போதும். நுளம்பார் உங்களோடு விளையாடவே மாட்டார். இந்த மென்பொருள் எழுப்பும் ஒருவித ஒலி அவரை உங்களிடம் அனுக விடாதாம். ஆனால் அந்த ஒலி உங்களுக்கு கேட்கவே கேட்காது. ஆகவே இதை பாவித்து பயனடைவீர்கள் என நம்புகிறேன்.
நான் என்னும் பாவனை செய்து பார்க்கவில்லை. ஏனேனில் இங்கே (யேர்மன்) நுளம்புகள் இல்லை. அதனால் எனக்கு இது பயன்பாடாது. நீங்கள் பாவித்துவிட்டு சொல்லுங்கள். எனக்கு இந்த கொசுக்களை விரட்டியடிக்க உதவும் மென்பொருள் போல் தொந்தரவு செய்யும் நன்பர்களை விரட்டியடிக்க ஏதாவது மென் பொருள் இருந்தால் பயன்படும். :-))
No comments:
Post a Comment