Sunday, January 10, 2010

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்


போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

தள்ளாத வயதினுலும் தளாராத தாகம் கொண்டீர்
தானைத் தலவனை வித்திட்டு தமிழெனுங்கும் உறவு கொண்டீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

உலகமெல்லாம் உறவிருக்க உம்முலகம் ஈழம்தானென்றீர்
இறுதிவரை மண்ணின் மைந்தர்களோடும் மக்களோடும் தானிருந்தீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

கொடிய மிருகங்களிடம் உம்முயிர் துறந்து
எம்மிருள் நீங்க அழியாச்சுடரானீர் அருட்தந்தையுமானீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்

ஆயிரமாயிரம் மாவீரச் செல்வங்களோடு நீரும் துயிலச்சென்றீர்
மானங் கொண்ட தமிழனிடத்தே மாதந்தை யெனும் பேருங்கொண்டீர்

போய்வாரும் தமிழ் தந்தையே போய்வாரும்