Thursday, April 16, 2009

ஒரே சொடுக்கில் 12 தளங்களில் கோப்புகளை ஏற்றுவதற்கு


நாம் தினமும் பல்வேறு கோப்புகளை Rapidshare தளத்தில் இருந்து இறக்கிப் பயன்பெற்றுள்ளோம்.

அங்கே யாரோ ஒரு நண்பர் இந்தக் கோப்புகளை ஏற்கனவே ஏற்றி வைத்துள்ளதால் நம்மால் அதைப் பயன்படுத்த முடிகிறது.

நாமும் நமது கோப்புகளை Rapidshare போன்ற கோப்புப்பகிர்வான் தளங்களில் (File Hosting Sites) ஏற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரு எளிய விடை : http://www.uploadmirrors.com/ தளத்தை நாடுவதே.

இந்தத் தளத்தின் வீட்டுப்பக்கத்தைத் (home page) திறந்து, எந்தக் கோப்பினை (file) ஏற்ற விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து Upload ஐ சொடுக்க வேண்டும்.

ஒரே சொடுக்கில் 12 தளங்களிலும் உங்களது கோப்பு ஏற்றப்பட்டு (upload) அவற்றிற்குரிய தரவிறக்கச் சுட்டி (download links) உங்களுக்குக் கிடைத்துவிடும்.

அந்தச் சுட்டிகளை (links) தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்கள் எளிதாக தரவிறக்கம் செய்ய இயலும்.

ஒவ்வொரு தளத்திற்கும் தனியாக பயனர் கணக்கு (user account) உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தள முகவரி : http://www.uploadmirrors.com/



தமிழ்நெஞ்சம் 

No comments: