பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் ”வரவு எட்டணா,செலவு பத்தணா” பாட்டில், குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்று பாட்டோடு பாட்டாக சொல்லி இருப்பார்கள்.
உதாரணமாக, “வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா”.
இப்போது recession என்று பூச்சாண்டி காட்டி, ஆட்குறைப்பு,சலுகைக்குறைப்பு என நம் கையில் புரளும் பணத்தை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
இந்த சமயத்தில், கையில் இருக்கும் பணத்தை மாசக் கடைசி வரை ஜவ்வு மாதிரி நீட்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.
அடுத்த மாசம் சம்பளம் வர வரைக்கும்தானேன்னு நீங்க கேட்கறத்துக்கு முன்னாடி, அடுத்த மாசம் வேலையிலே இருப்போமான்னு முதல்ல கேட்டுக்குங்க.
ஏன் இவ்வளவு பில்ட்-அப்?
நம்ம கூகிள் Tip Jar -ன்னு ( http://www.google.com/tipjar) ஒரு புதிய சேவையை ஆரம்பித்து இருக்கிறது.
வீட்டில், அலுவலகத்தில், ஷாப்பிங்கில் என்று எங்கே,எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்ற மற்றவர்களின் ஐடியாக்களை தெரிந்து கொள்ளவும், உங்களுடைய ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒரு பயனுள்ள தளமாக விளங்க முயற்சிக்கிறது.
உங்களுக்கு உபயோகமான சேமிப்பு ஐடியாக்களுக்கு ஓட்டு போட்டு அதன் popularity-ஐ ஏற்றலாம், அல்லது பிடிக்காதவற்றுக்கு Negative ஓட்டு போட்டு குறைக்கலாம்.
பார்த்ததில் என் ஃபேவரிட் “சுதந்திர மென்பொருளை பயன்படுத்துங்கள். காசு மிச்சம்!!”
இப்ப இருக்கிற பொருளாதார மந்த நிலைக்கு இந்த சேவை தேவைதான்.
அலர்ட்!!
நீங்க கொடுக்கிற ஐடியாக்களை, ஒரு பைசா கொடுக்காமல் கூகிள் பயன்படுத்திக் கொள்ள அதற்க்கு உரிமை இருக்கிறதாம்.
தேடித் தேடிப் பார்த்தேன். BETA வார்த்தையே காணோம்.
சந்தேகமாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்க.
BETA -ன்னு ஒரு வார்த்தை இல்லேன்னா, அது உண்மையாலுமே கூகிள் சேவைதானா?
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com
No comments:
Post a Comment