ஜி-ஸ்பேஸ் ஆனது ஃபயர்ஃபாக்ஸ் எக்ஷ்டென்சன் ஆகும். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்பலோரர் உபயோகித்தால், முதலில் ஃபயர்ஃபாக்ஸைப் பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.
ஃபயர்ஃபாக்ஸில் இதே பக்கத்தைத் திறக்கவும். (இன்டர்நெட் எக்ஸ்பலோரரில் வேலை செய்யாது.) பின்னர், இந்த ஜி-ஸ்பேஸ் எக்ஷ்டென்சன் பக்கத்திற்குச் செல்லவும்.
அந்த பக்கத்தில் இருக்கும் “ADD TO FireFox" என்ற பச்சை நிற பொத்தானை கிளிக் செய்யவும்.
ஒரு பாப்-அப் திரை திறக்கும், அதில் “Install Now"-ஐ கிளிக் செய்யவும். இன்ஸ்டால் ஆன பின், ”ரிஸ்டார்ட் ஃபயர்ஃபாக்ஸ்” பொத்தானை கிளிக் செய்யவும். ஃபயர்ஃபாக்ஸ் ஒரு முறை மூடி மறுமுறை திறக்கும். அவ்வளவு தான், நீங்கள் “ஜி-ஸ்பேஸை” உங்கள் கணினியில் நிறுவி விட்டீர்கள்.
இப்போது ஜி-ஸ்பேஸை உபயோகித்து எப்படி உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாக ஆன்லைனில் சேமிப்பது என்று பார்ப்போம்.
இப்போது ஃபயர்பாக்ஸில் “Tools--->Gspace” ஆப்சனை கிளிக் செய்யவும்.
படத்தில் காட்டியது போல ஒரு திரை திறக்கும்.
இடது பக்கத்தில் இருப்பது, உங்களுடைய கணினி நினைவகத்தில் உள்ள கோப்புகள். வலது பக்கம் இருப்பது, ஜிமெயிலில் ஜி-ஸ்பேஸ் உபயோகித்து நீங்கள் பதிவேற்றிய கோப்புகள் இருக்கும். (முதல் முறை உபயோகிக்கும் போது, வலதுபுறத்தில் எந்த கோப்புகளும் இருக்காது.)
பதிவேற்றம் செய்ய நினைக்கும் கோப்பு/ஃபோல்டர் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்யவும். (”browse" ஆப்சன் உபயோகித்து சரியான லோக்கேசனிற்கு செல்லவும்). ”Upload" என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான், உங்கள் கோப்பு பதிவேற்றம் ஆகி விடும்.
பதிவிறக்கம் செய்ய வலதுபுறத்தில் இருக்கும் பைல் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்யவும். அதில் இருக்கும் “Download”-ஐ கிளிக் செய்யவும், உங்கள் கணினிக்கு ஜி-மெயிலில் இருக்கும் கோப்பு பதிவிறக்கம் ஆகிவிடும்.
5 comments:
Thanks Dear Dude...
Gspace is not from google. It is a private firefox extension and is not certified or promoted by google in anyway.
Can you remove the word verification please.
அறியத் தந்தமைக்கு நன்றி!
இலவசக்கொத்தனார் நீங்கள் சொல்வது மிகவும் சரி.
வருகைக்கு நன்றிகள் தமிழ்நெஞ்சம்.
Post a Comment