Friday, October 31, 2008

மடிக்கணினியின் திரையை மட்டும் அணைப்பது எப்படி?

மேசைக்கணினிகளின் மானிட்டரை ஆஃப் செய்துவிட்டுப் பாடல்களை மட்டும் ஒலிக்கும்படி செய்யும் இணைஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறோம்.

ஆனால் மடிக்கணினியில் இவ்வாறு மானிட்டரை மாத்திரம் அணைத்துவிட்டுப் பாடல்களைக் கேட்பதற்கு வழிவகை உள்ளதா? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்ததுதான் இந்தப் பதிவு.



65 கேபி அளவுள்ள ஒரு சிறிய மென்பொருள் பயன்பாட்டை இயக்குவதன் மூலம் மானிட்டரை அணைத்துவிட முடியும்.

இந்த அப்ளிகேசனை நிறுவுவதற்கு முன் உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0 நிறுவியிருக்க வேண்டும்.



பயன்பாட்டை தரவிறக்கம் செய்ய

மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0 



தமிழ்நெஞ்சம்   


Sunday, October 26, 2008

Quarkbase இணையத்தளம்


உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.
இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.
இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.
உடன போய் தேடி பாருங்க..
ஊரோடி 

Saturday, October 18, 2008

இணையப்பக்கங்களை அச்செடுக்க உதவும் தளம்

எப்பொழுதாவது ஏதாவது ஒரு இணையப் பக்கத்தை அச்செடுக்க முயன்றிருப்பீர்கள். ஆனால் அதில் அச்சுக்குத் தேவையில்லாத வெறும் வெற்று இடைவெளிகளும், விளம்பரங்களும், கட்டம் கட்டமாகக் காரணமே இல்லாத தகவல்களும் சேர்ந்தே அச்சாகி வெளியே வரும். இதனால் அச்சு மை, தாள், நேரம், பணம் என நிறையக் காரணிகள் செலவாகும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது.

தளத்தின் யு.ஆர்.எல் பெட்டியில் எந்த இணையத்தளம் என்பதன் முகவரியை உள்ளிட வேண்டும்.
பிறகு எந்த எந்தப் பகுதிகள் மாத்திரம் உங்களுக்குத் தேவை என்பதை கட்டம் கட்டிக் காண்பிக்க வேண்டும்.


பிரிண்ட் - எனக் கொடுத்தால் நமக்குத் தேவையான பகுதிகள் மாத்திரம் அச்சாகி வெளிவரும்.

சிறப்பம்சங்கள் : 
எந்தவிதமான மென்பொருள் தரவிறக்கம், நிறுவுதல் எதுவும் தேவையில்லை.
பின்னால் உள்ள படங்களை அகற்றிவிட்டு அச்செடுக்கலாம்.
எழுத்துருக்களைப் பெரிதாக / சிறிதாக மாற்ற முடிகிறது.

இணையப்பக்கத்தில் எந்த குறிப்பிட்ட அம்சங்கள் மாத்திரம் உங்களுக்குத் தேவையோ அவைகளை மாத்திரம் அச்செடுக்கலாம் என்பதே இந்தத்தளத்தின் தாரகமந்திரம்.



Wednesday, October 8, 2008

ஃபோல்டர் (டைரக்டரி) யை அச்செடுக்க - இலவச மென்பொருள்


ஃபோல்டர் / டைரக்டரியை அச்செடுக்க (பிரிண்ட்) உதவக்கூடிய வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது. இலவசமாகவும் இணையத்தில் கிடைக்கிறது.


ஒரு ஃபோல்டரின் ஒட்டுமொத்தக் கோப்புகளின் எண்ணிக்கை 1000க்குள் இருந்தால் இந்தப் பயன்பாட்டின் செயல்பாடு நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கும், இணையிறக்கச் சுட்டிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.

CWShex32

DirPrinting

YourDir



பத்து இலவச மென்பொருள்கள்













படத்தின் மேல் சொடுக்கினால் சம்பந்தப்பட்ட தளத்துக்குச் சென்று மேலதிக விபரங்களைப் பெறலாம்.





அரைமணியில் காலாவதியாகும் அவரச மின்னஞ்சல் சேவை


தற்காலிக மின்னஞ்சல் சேவை (அரை மணி நேரத்துக்கு மாத்திரம்)

இணையத்தில் எத்தனையோ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒரு வித்தியாசமான இலவசச் சேவை என்று நான் கருதுகின்றேன்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை இணையத்தின் ஊடாகப் பிறருக்குக் கொடுப்பதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.

உங்களுக்கு உதவுவதற்காக ஒரு தற்காலிக மின்னஞ்சல் சேவை வழங்கியானhttp://www.notmymailbox.com/ ஐ நாடலாம்.

அங்கே ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் உங்களுக்கே உங்களுக்கான தற்காலிக மின்னஞ்சலைக் கொடுக்கிறார்கள்.

உதாரணம் : wva2qfmnnf@notmymailbox.com

அரை மணிக்குள்ளாக உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை அங்கேயே காணலாம். புதிய அஞ்சல்களை அதே ஐடி. வாயிலாக பிறருக்கு அனுப்ப முடியாது என்பது மட்டும் வருத்தமே. அந்த ஐடி. காலாவதி ஆகுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் காட்சிப்படுத்துகிறார்கள்.



Saturday, October 4, 2008

ஃப்யர்பேக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு சில முக்கிய Addons

ஃப்யர்பேக்ஸ் உபயோகிப்பவர்களுக்கு சில முக்கிய சேர்ப்பான்களை (Addons) இந்த இணையதளம் தருகிறது.

இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

இதோ அந்த தளம்