Wednesday, October 8, 2008

அரைமணியில் காலாவதியாகும் அவரச மின்னஞ்சல் சேவை


தற்காலிக மின்னஞ்சல் சேவை (அரை மணி நேரத்துக்கு மாத்திரம்)

இணையத்தில் எத்தனையோ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒரு வித்தியாசமான இலவசச் சேவை என்று நான் கருதுகின்றேன்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை இணையத்தின் ஊடாகப் பிறருக்குக் கொடுப்பதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.

உங்களுக்கு உதவுவதற்காக ஒரு தற்காலிக மின்னஞ்சல் சேவை வழங்கியானhttp://www.notmymailbox.com/ ஐ நாடலாம்.

அங்கே ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் உங்களுக்கே உங்களுக்கான தற்காலிக மின்னஞ்சலைக் கொடுக்கிறார்கள்.

உதாரணம் : wva2qfmnnf@notmymailbox.com

அரை மணிக்குள்ளாக உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை அங்கேயே காணலாம். புதிய அஞ்சல்களை அதே ஐடி. வாயிலாக பிறருக்கு அனுப்ப முடியாது என்பது மட்டும் வருத்தமே. அந்த ஐடி. காலாவதி ஆகுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் காட்சிப்படுத்துகிறார்கள்.



No comments: