Saturday, October 18, 2008

இணையப்பக்கங்களை அச்செடுக்க உதவும் தளம்

எப்பொழுதாவது ஏதாவது ஒரு இணையப் பக்கத்தை அச்செடுக்க முயன்றிருப்பீர்கள். ஆனால் அதில் அச்சுக்குத் தேவையில்லாத வெறும் வெற்று இடைவெளிகளும், விளம்பரங்களும், கட்டம் கட்டமாகக் காரணமே இல்லாத தகவல்களும் சேர்ந்தே அச்சாகி வெளியே வரும். இதனால் அச்சு மை, தாள், நேரம், பணம் என நிறையக் காரணிகள் செலவாகும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது.

தளத்தின் யு.ஆர்.எல் பெட்டியில் எந்த இணையத்தளம் என்பதன் முகவரியை உள்ளிட வேண்டும்.
பிறகு எந்த எந்தப் பகுதிகள் மாத்திரம் உங்களுக்குத் தேவை என்பதை கட்டம் கட்டிக் காண்பிக்க வேண்டும்.


பிரிண்ட் - எனக் கொடுத்தால் நமக்குத் தேவையான பகுதிகள் மாத்திரம் அச்சாகி வெளிவரும்.

சிறப்பம்சங்கள் : 
எந்தவிதமான மென்பொருள் தரவிறக்கம், நிறுவுதல் எதுவும் தேவையில்லை.
பின்னால் உள்ள படங்களை அகற்றிவிட்டு அச்செடுக்கலாம்.
எழுத்துருக்களைப் பெரிதாக / சிறிதாக மாற்ற முடிகிறது.

இணையப்பக்கத்தில் எந்த குறிப்பிட்ட அம்சங்கள் மாத்திரம் உங்களுக்குத் தேவையோ அவைகளை மாத்திரம் அச்செடுக்கலாம் என்பதே இந்தத்தளத்தின் தாரகமந்திரம்.



No comments: