Saturday, March 28, 2009

இணையத்தில் புதிது - ரியா நுட்பம்


இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.
RIA - Rich Internet Applications
RIA - Rich Internet Applications
இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.
சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.
இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.
இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.
இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.
எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.
கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications

கணினி விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய 5 தளங்கள்


கணினி விளையாட்டுகளை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் நண்பர் ஒருவர் எந்த நேரமும் கணினியில் விளையாடிக்கொண்டே இருப்பார். எங்கிருந்தாவது புதிய புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழ்வார்.
“வாழ்வது ஒரு முறை - நமக்கென வாழ்வதே நன்முறை”- என்பது அவரது தத்துவம்.
Free Games
Free Games
பழைய விளையாட்டுகள் போரடித்தால் உடனே புதிய விளையாட்டுகளை தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடுவார். நீரில்லாத மீன் எப்படித் துடிக்குமோ - அதே போல அவரது மனம் படபடவென்று துடிக்க ஆரம்பித்துவிடும்.
அவரே எனக்கு இந்த தளங்களை சிபாரிசு செய்தார். இங்கே முற்றிலும் இலவசமான கணினி விளையாட்டுகள் உங்கள் தரவிறக்கத்துக்காகக் காத்திருக்கின்றன. உங்கள் பணப்பையில் இருந்து பணம் செலவு செய்யத் தேவையில்லை. கடன் அட்டை மூலம் கணினி விளையாட்டுகள் வாங்கத் தேவையில்லை.
அந்தத் தளங்கள் இதோ:
  1. GameTop.Com
  2. FreeGamePick.Com
  3. FunPcGame.Com
  4. Share-Games.Com
  5. GrandMatrix.Com
கலைச்சொற்கள்:
கணினி விளையாட்டுகள் - Computer Games
தரவிறக்கம் - Download
பணப்பை - Wallet
கடன் அட்டை - Credit Card

Friday, March 27, 2009

தேடுதல் வசதி இல்லாதத் தளங்களில் தேடுவது எப்படி?

தகவல் அதிகமாக இருக்கும் சில தளங்களில் கூட தேடுதல் வசதி இருப்பதில்லை. அப்படிப்பட்ட தளங்களில், கூகிள் உபயோகித்துத் தேடுவது எப்படி என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால்,  எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும்.  குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும்  முடிவு வேண்டும் என்றால்,  கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:  
keyword +site:http://www.sitename.com

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில் தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

(ஜிமெயில் என்று இந்த தளத்தில் தேடிட, இவ்வாறு கொடுக்க வேண்டும்!)

பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி

உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.

1.
ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.


2.I’ll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.


3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா என்று கவனிக்கவும்.


4.அடுத்ததாக உள்ள network.http.pipelining.maxrequest என்பதை Double click செய்து தோன்றும் விண்டோவில் 4 என்பதை 8 ஆக மாறிக்கொள்ளவும்.

5.
கடைசியில் உள்ள network.http.proxy.pipelining என்பதை Double click செய்து False என்பதைTrue ஆக மாற்றிக்கொள்ளவும்.

6.
இனி about:config விண்டோவில் Right click செய்து New என்பதை select செய்யவும் . அதில்Boolean என்பதை கிளிக் செய்யவும்.









7.
புதியதாக தோன்றும் விண்டோவில் content.interrupt.parsing என்று டைப் செய்து Okசெய்யவும் .









8. 
இறுதியாக true என்பதை select செய்து ok செய்யவும் .












கார்த்திக் 

Sunday, March 22, 2009

வெட்டு ஒண்ணு துண்டு நாலு
































Download 




உரிமை Tamil Wares 

மெயில் இன்பாக்ஸிலேயே இண்டர்நெட் - அலுவலத்தில் தடை செய்திருந்தாலும் இணையத்தில் உலவலாம்.

உங்கள் அலுவலகத்தில் இண்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளதா? உங்கள் அலுவலக் கணினியில் Ms Outlook / Outlook Express / Thuderbird, மூலம் மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியுமா?    இனி கவலை வேண்டாம், மெயில் மூலமாகவே நீங்கள் இணைய தளங்களையும் உலாவிட முடியும்.

Rediff நிறுவனம், Web-in-Mail என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.  உங்கள் Outlook-லிருந்து, ”browse@webinmail.com” என்ற முகவரிக்கு, Subject-ல் நீங்கள் பார்வையிட நினைக்கும் தளத்தின் முகவரியை உள்ளீடு செய்து அனுப்பவும்.  ஓரிரு நிமிடங்களில், Web-in-mail அந்த தளத்தை உங்கள் mailbox-ற்கு அனுப்பி வைத்து விடும்.

உதாரணமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பின் உங்களுக்கே புரியும். 
To: browse@webinmail.com
Subject: www.google.com 
Content: left blank



கூகிளில் தேடிட, Subject-இல் google:keyword என்று அனுப்பினால், ரிஸட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதே போல, கூகிள் இமேஜஸில் தேடிட, googleimg: keyword என்று கொடுக்க வேண்டும்.
மேலும், அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்வையிட முடியும்.



Tuesday, March 10, 2009

MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் பார்ப்பது எப்படி?


நேற்று ஒருவர் வீட்டிற்குக் கணினி பழுது நீக்க(hardware service) சென்றிருந்தேன். அப்போது அவர் அவருடைய கணினி மிகவும் மெதுவாக இயங்குகிறது எனக் குறை கூறினார்.  அவர் கணினி "Add/Remove Program"-ஐ பார்க்கும் போது தான் தெரிந்தது, ஒரே வேலையை செய்யும் பல்வேறு மென்பொருட்களை நிறுவி இருந்தார்.  முக்கியமாக, DVD player, AVI Player, DIVX player, MP4 player, MKV player என வரிசையாக 15 மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து நிறுவியிருந்தார்.
மென்பொருட்களை நிறுவாமலேயே, எல்லா வகைக் கோப்புகளையும் பார்ப்பது எப்படி என்று அவருக்கு விளக்கமாக கூறினேன்.  அந்த விளக்கம் உங்களுக்காக........
ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம்.  ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும், மேலே கூறிய அனைத்து வகை கோப்புகளும் "Windows Media Player"-இலேயே பார்க்கலாம். “Windows® Essencials Codec Pack” என்ற codec pack-ஐ நிறுவினால், போதும்.  அனைத்து வகை கோப்புகளும், உங்கள் “Windows Media Player"-இலேயே பார்க்கலாம்.மேலும் இது மொத்தமே 6mb தான்.
Windows® Essencials Codec Pack தரவிறக்கம் செய்திட, இங்கே செல்லவும் .


Windows Media Player-ல் MKV கோப்புகளும், flv கோப்புகளும்  மட்டும் play ஆகாது, "Media Player Classic" என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். 
WECP support செய்யும் அனைத்து வீடியோ format-களும்.



பாபு 

கோப்புகளை விரிக்க ஒரு நேரடி வசதி


சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம். அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.

ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.

நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/

இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச் செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.
விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத் தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும். உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.

குறிப்பு :
1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.
2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமே


தளமுகவரி : http://www.wobzip.org/





தமிழ்நெஞ்சம் 

பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க

மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம்.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.


இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன்மூலம் பழுதடைந்த CD / DVD களிலில் ஏற்றப்பட்ட தகவல்களை மீட்பதற்கும் வழியுண்டு.

http://www.aivsoft.com/downloads/badcdreader/BadCDDVDreaderSetup.exe

DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும்.


ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ, நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.
http://www.aivsoft.com/downloads/dvdcutter/dvdcutterSetup.exe



தமிழ்நெஞ்சம்