Friday, March 27, 2009

தேடுதல் வசதி இல்லாதத் தளங்களில் தேடுவது எப்படி?

தகவல் அதிகமாக இருக்கும் சில தளங்களில் கூட தேடுதல் வசதி இருப்பதில்லை. அப்படிப்பட்ட தளங்களில், கூகிள் உபயோகித்துத் தேடுவது எப்படி என்று பார்ப்போம்.
கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால்,  எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும்.  குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும்  முடிவு வேண்டும் என்றால்,  கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:  
keyword +site:http://www.sitename.com

keyword - தேடு சொல்.
http://www.sitename.com என்பது எந்த தளத்தில் தேட வேண்டுமோ, அந்த தள முகவரி.

(ஜிமெயில் என்று இந்த தளத்தில் தேடிட, இவ்வாறு கொடுக்க வேண்டும்!)

No comments: