Tuesday, March 10, 2009
கோப்புகளை விரிக்க ஒரு நேரடி வசதி
சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம். அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.
ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.
நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/
இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச் செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.
விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத் தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும். உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.
குறிப்பு :
1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.
2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமே
தளமுகவரி : http://www.wobzip.org/
தமிழ்நெஞ்சம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment