இன்றைய நவீன இணைய உலகில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக தட்டெழுத வேண்டி இருப்பின், அதற்காக நமது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருளை நிறுவி அதன் மூலம் தட்டெழுதினோம்.
இப்போது இணைய தளத்திலேயே நேரடியாக தட்டி அதனால் விளைந்த கோப்பு ஒன்றை மட்டும் கணினியில் தரவிறக்கிக் கொள்கிறோம்.
சில காலம் முன்பு வரை புகைப்படங்களில் மாற்றங்கள் தேவையெனில் அதற்காக போட்டோஷாப் போன்ற மென்பொருளைக் கணினியில் நிறுவி அதைப் பயன்படுத்தினோம்.
இப்போது அதற்கு மாற்றாக இணையத்திலே புகைப்படங்களை ஏற்றி எடிடிங் வேலைகளை முடித்து இறுதியாகக் கிடைக்கும் புகைப்படத்தை நமது கணினிக்கு மாற்றிக்கொள்கிறோம்.
இப்போது ஒரு படி மேலே சென்று வீடியோக்களையும் இணையத்தளத்தில் ஏற்றி அங்கேயே எடிடிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது.
இதற்குப் பெயர்தான் ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ். செல்லமாக ரியா.
எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கி நிறுவ வேண்டிய அவசியமின்றி அனைத்துச் செயல்களையும் இணைய தளத்திலேயே செய்ய வழிவகை வகுத்த புதிய தொழில்நுட்பமே RIA.
கலைச்சொற்கள்:
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications
மைக்ரோசாப்ட் வேர்ட் - Microsoft Word
போட்டோஷாப் - Adobe Photoshop
புகைப்படத்தில் மாற்றம் செய்தல் - Photo Editing
எடிடிங் - Editing
ரிச் இண்டெர்நெட் அப்ளிகேசன்ஸ் - Rich Internet Applications
4 comments:
Hi, It was taking more than 40 minutes for writing this kind of posts.
I referred 12 sites for writing this post.
You simply made copy of it and using it.
Please consider our effort. Please do some appreciation. Instead of copying, and pasting here.. please consider our effort.
உங்கள் கடையிலேயும் விளம்பரம் போடுறீங்க. எங்கள் கடையிலேயும் விளம்பரம் போடுறோம்.
நாங்க ஒரு போஸ்ட் போடுவதற்கே 40 முதல் 60 நிமிடம் செலவழிச்சு - பல சைட்களை ரெஃபர் செய்து போடுறோம்.
நீங்க சும்மா ஜல்லியா காப்பி-பேஸ்ட்டிட்டு நைஸா ஒரு டிஸ்க்ளைமர் விட்டுடுரீங்க. நெட்டில் சுட்டது அப்படின்னு.
நான் என்னுடைய தளங்களில் பிற இணையத்தில் கண்ட படங்களை சுட்டுப்போடுவேன். ஆங்கிலத் தளத்தில் மடேர் மடேர்னு சுட்டுப்போடுவேன்..
ஆனால் தமிழ் தளத்தில் உக்காந்து மூளையைக் கசக்கி ஒரு பதிவு போட்டு ஓட்டு வாங்கி பப்ளிஷ் ஆகி.. இவ்வளவு தடைகள்.
கொஞ்சம் எங்களையும் கன்சிடர் பண்ணுங்க மச்சி..
tamilnenjam@gmail.com
பதிவுகளைச் சுடுபவர்கள் கவனத்திற்கு :
ஒருத்தர் ஒரு பதிவைச் சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு.
நானாவது அதை ஆங்கிலத்திலுருந்து சுட்டேன். அவர் தமிழில் இருந்து சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு.
இருந்தாலும் விகடனார் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டை மதித்துள்ளார்.
http://yespinki.com/2009/03/blog-post_23.html
கடந்த பதிவு “சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்..”
விகடனின் சிறந்த ப்ளாக் பிரிவில் தேர்ந்தெடுக்க பட்டமைக்கு என்னுடைய நன்றிகள் ! கூடவெ தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் என் நன்றி!!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
என்ற விகடன் முகவரிஇல் குட் Blogs பிரிவில் காண்க ..
சுட்ட இடம் :
http://www.tamilnenjam.org/2008/12/2008.html
பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு.. இனிமேல் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.
ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.
மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே.
தாராளமாக உங்களுக்கு விருப்பமிருந்தால் பதிவுகளைச் சுடலாம்.
எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை.
ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..
பதில் தனிமடலில் :-(( :-))
உங்கள் உடனடித் தனி மடலுக்கு மிக்க நன்றி. சேவைகள் தொடரட்டும்.
ஆனால் பதிவிட்டு ஒரு வாரம் ஆனபிறகு நகலெடுத்துக்கொள்ளவும். உடனே வேண்டாம். சரியா.
Post a Comment